பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
290

விரும்பச் சம்பந்தம் உள்ளது; 1இங்ஙனம் விரும்பாத போது தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும் பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?

    2‘ந தேகம் - இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில் பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா. ந பிராணாந் - சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா. ந சுகம் -பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா. இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா. இவையெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்துமாவுக்கே அன்றோ? அந்த ஆத்துமாதானும் வேண்டா. இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்? உன்  திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில, அவை ஒன்றும் எனக்கு வேண்டா. நாத - உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில், கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ‘ஒரு கணமும் பொறுக்கமாட்டேன்; இவைதம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது; நசித்துப்போம்படி செய்யவேண்டும். இது கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன, தத் சத்யம் - அது மெய். மது மதந - ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார். 3‘மகாரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை; பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி. ‘பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில், ‘இருக்கிறது அரக்கியர்கள்

_____________________________________________________

1. ‘ஆத்துமா இயல்பிலே ஆனந்தமயனாயிருக்க, அவன் விரும்பின வழியாலே
  விரும்புகிறது என்பது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இங்ஙனம் விரும்பாத போது’ என்று தொடங்கி.

2. ‘அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு
  சம்பந்தப்பட்ட பொருள்களிலும் இப்படி நசை அற்றவர் உளரோ?’ என்ன, ‘ந
  தேகம்’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது,
  தோத்திர ரத்நம்,
57.

3. ஸ்ரீராமா. சுந். 26 : 5.