ஏறு ஆளும
ஏறு ஆளும் இறையோனும்
திசை முகனும் கூறு ஆளும் தனி உடம்பன் - இதனால், 1‘நான், நான்,’ என்பார்க்கும்
அணையலாம்படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள், 2 ‘கண்ட
காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள். ஏறு ஆளும்
-3சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய்
இருக்குமாகில், தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தையுடையேன்’ என்று செருக்குற்று
இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார். ஆளும் - 4இவனுடைய இரு வகைப்பட்ட
உலகங்களின் ஆட்சி இருக்கிறபடி. 5அவன் உபயவிபூதிகளுக்கும் கடவனாய்ச் சர்வேசுவரனாயிருப்பான்
: கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின்,
‘இறையோன்’ என்கிறார். திசைமுகனும் - படைத்தலுக்கு உறுப்பாக நான்கு வேதங்களையும் உச்சரிப்பதற்குத்
தகுதியான நான்கு முகங்களையுடையனாய், ‘நான் படைப்பவன்’ என்று செருக்குற்று
_____________________________________________________
1. ‘சிவன், பிரமன்’ என்னாமல்
‘ஏறாளும்’, ‘திசைமுகன்’ என்று விசேடித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘நான், நான்’ என்று
தொடங்கி. என்றது,
அவர்களுடைய உயர்வைச் சொல்லுகிறது அன்று;
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும்
சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’
என்னுமதனைச் சொல்ல வந்தது.
2. அதனை ரசோக்தியாக விவரிக்கிறார்,
‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் - கந்தையையுடையவன்;
சிவன். அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு
நாபீ கமலத்தில் பிறந்தவன்
என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.
3. ‘ஏறு’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘சர்வேசுவரன்’ என்று
தொடங்கி.
4. உடையவன் என்னாமல்,
‘ஆளும்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘இவனுடைய’ என்று தொடங்கி.
5. சிவனை
‘இறையோன்’ என்றதற்குக் கருத்து, ‘அவன்’ என்று தொடங்கும்
வாக்கியம்.
|