இ
இருக்கிற பிரமனும்.
1‘தர்ம தர்மிகளுக்கு ஐக்கியம் உண்டித்தனை போக்கி, தர்மி துவயத்துக்கு ஐக்கியமில்லை,’
என்க.
திருமகளும் -
2‘நான் ஸ்ரீ ராகவனுக்கு வேறு ஆகாதவள்’ என்று சொல்லுகிறபடியே இருக்கிற பெரிய பிராட்டியும்.
கூறு ஆளும் தனி உடம்பன் -இவர்கள் கூறு இட்டு ஆளும்படி ஒப்பற்ற உடம்பு படைத்தவன். 3‘நாங்கள்
அதிகாரி புருஷர்களுடையவர்கள்’ என்று பிராட்டி பக்கத்திலே புக்குச் சிலர் அழிவு செய்தல்,
‘நாங்கள் படுக்கைப் பற்றிலுள்ளோம்’ என்று சிலர் அவர்கள் எல்லையிலே புக்கு அழிவு செய்தல்
செய்ய ஒண்ணாதபடி ஆளுகின்றாராதலின், ‘கூறு ஆளும்’ என்கிறார். 4திவ்யாத்ம
சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ? 5எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான்
இருப்பது? 6இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’
என்கிறாள்.
_____________________________________________________
1. ‘சிவனாய் அயனானாய்’ என்று
ஐக்கியம் சொல்லாநிற்க, ‘இறையோன்,
திசைமுகன்’ என்று பேதகமாகச் சொன்னதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார்,
‘தர்ம தர்மிகள்’ என்று தொடங்கி. என்றது, ‘தேவன் என்றால், தேவ
சரீரத்துக்கும், சரீரியான ஆத்துமாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிறாப்போலே,
இவர்கள் சரீரமாயும்
அவன் சரீரியாயும் இருக்கையாலே ஐக்கியம்
சொன்னதித்தனை போக்கி, சொரூப ஐக்கியம் சொல்லவில்லை,’
என்றபடி.
தர்மம் - சரீரம். தர்மி - ஆத்துமா. தர்மி துவயம் - இரண்டு தர்மிகள்.
2. ஸ்ரீராமா. சுந்.
21 : 15. இது, இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
3. ‘ஆளும்’ என்னாது, ‘கூறாளும்’
என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘நாங்கள்’ என்று தொடங்கி. ‘படுக்கைப்பற்றிலுள்ளோம்’
என்றது, ‘அந்தப்புர
சம்பந்திகளாயுள்ளோம்’ என்றபடி.
4. ‘திவ்வியாத்தும சொரூபம்
அன்றோ ஒப்பற்றது? அங்ஙனமிருக்க,
திருமேனியைத் ‘தனியுடம்பு’ என்னுதல் என்?’ எனின்,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘திவ்யாத்தும சொரூபத்திலும்’ என்று தொடங்கி.
5. ‘பெரிய பிராட்டியாருக்கு
ஒழிய, யான் எனது என்னும் செருக்கையுடைய
சிவனுக்கும் பிரமனுக்கும் இருப்பிடம் என்னலாமோ?’ என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘எல்லார்க்கும்’ என்று தொடங்கி.
6. ‘கூறாளும்
தனியுடம்பன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இப்படி’
என்று தொடங்கி.
|