பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
294

New Page 1

    குலம் குலமா அசுரர்களை நீறு ஆகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் - இதனால், 1‘அணைக்கைக்குத் தடை உண்டாய்த்தான் இழக்கின்றேனோ?’ என்கிறாள். மேற்கூறியது, 2‘இந்த உலகத்தில் இக்காலத்தில் குணங்களையுடையவர் யாவர்?’ என்பது போன்றது. ‘வீரத்தையுடையவர் யாவர்?’ என்பது போன்றது இது. குலம் குலமா அசுரர்களை - குலம் குலமாக அசுரர் கூட்டத்தை. நீறாகும்படியாக நிருமித்து - 3‘என்னால் முன்னரே கொல்லப்பட்டு இருக்கிறார்கள்’ என்கிறபடியே, உறவு வேண்டேம்’ என்ற போதே சாம்பலாகப் போகும்படி நினைத்து. படை தொட்ட - 4‘உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன், அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையையுடையவனாய் மேல் விழுவான். 5படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான், அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான். 6‘யாகங்களுக்கு இடையூறு செய்கின்றவர்களையும், பாண்டவர்கட்குத் துன்பம் செய்கின்றவர்களையும் நான் வருத்துவேன்!’ என்கிறபடியே, ‘தன்னை மிடற்றைப்

_____________________________________________________

1. ‘விரோதிகளை அழிக்கின்றவன்’ என்று சொல்லுகின்றவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘அணைக்கைக்கு’ என்று தொடங்கி.

2. சங்க்ஷேப ராமாயணம்.  ‘மேற்கூறியது’ என்றது, ‘கூறாளுந்தனியுடம்பன்’
  என்றதனாற்கூறப்பட்ட சௌசீல்ய குணத்தை.

3. ஸ்ரீ கீதை, 11 : 33. இது, நினைத்த போதே நீறு ஆயினமைக்குப்
  பிரமாணம்.

4. ‘நினைத்தால் மாத்திரம் போதியதாமே? படை எடுப்பான் என்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உலகத்தை’ என்று தொடங்கி. என்றது,
  ‘அடியார்களிடத்து வைத்த அன்பினால் செய்கிறான்’ என்றபடி. சங்கல்பம் -
  நினைத்தல்.

5. ‘படைதொட்ட’ என்றதற்குப் பாரதப் போரைத் திருவுள்ளத்திலே கொண்டு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘படைத்தல் முதலிய’ என்று தொடங்கி. ‘அசத்திய
  சங்கல்பன்’ என்றது, வீடுமனைக் கொல்லுதற்குத் திருவாழியைத் திருக்கரத்தில்
  ஏந்தியது, திருவாழியைக்கொண்டு சூரியனை மறைத்தது முதலிய
  செயல்களைத் திருவுள்ளம் பற்றி என்க. ‘சங்கல்பத்தோடு அமையாது அதற்கு
  மேலும் காரியங்களைச் செய்வான் அடியார்கள் விஷயத்தில்’ என்றபடி.

6. சங்கல்பத்தால் அன்றிக்கே, தானே அழியச் செய்வான் என்பதற்குப்
  பிரமாணம், ‘யாகங்களுக்கு’ என்று தொடங்குவது. ‘தன்னை மிடற்றைப்
  பிடித்தாரையும்’ என்றது, யாகங்கட்கு இடையூறு செய்கின்றவர்களைக்
  குறித்தபடி. பரிபாடல், 2-ஆம் பாடல், 61 முதல் 68 முடியவுள்ள
  அடிகளையும், அவற்றின் உரையையும் காண்க. ‘உயிர் நிலையிலே
  நலிந்தாரையும்’ என்றது, பாண்டவர்கட்குத் துன்பம் செய்கின்றவர்களைக்
  குறித்தபடி.