|
New Page 1
முன்னர் என் பக்கல்
மிக்க காதலையுடையன் ஆனவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.
மடம் நெஞ்சால்
குறை இல்லா - மடப்பமாவது, மென்மை; அதாவது, நெஞ்சில் நெகிழ்ச்சி. என்றது, 1முலை
உண்ணும்போது யசோதைப்பிராட்டிக்குப் பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக்கொண்டு வந்தபடி. 2‘அகவாயில்
உள்ளது பகைமையாய் இருக்கச்செய்தே, அத்தை மறைத்துக்கொண்டு, அன்பு தோற்ற வந்தவள்’ என்பதனைத்
தெரிவித்தபடி. மகள் தாய் செய்து - தாய் மகள் செய்து; என்றது, ‘பேயான தான் மனித வேடத்தைக்
கொண்டு, அதுதன்னிலும் 3‘பெற்ற தாய் போல்’ என்கிறபடியே, தாய் வடிவைக் கொண்டு
வந்தவள்’ என்றபடி. மகள் என்பது மனிதர்கட்குப் பெயர். மகள் - மக்கள். ஒரு பேய்ச்சி - இஃது
என்ன வஞ்சனைதான்! ‘வஞ்சனைக்கு ஒப்பற்றவள்’ என்றபடி. அன்றிக்கே, ‘நலிய வந்தாள்’ என்னும்
கோபத்தாலே விருப்பம் இல்லாத வார்த்தையாகவுமாம்.
விடம் நஞ்சம் -
விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம்
என்று சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல். அன்றிக்கே, பேய்ச்சிவிட - பேயானவள் உயிரை
விடும்படி, நஞ்சம் முலை சுவைத்த - ‘நஞ்சு முலையை அமுது செய்த’ என்னுதல். என்றது, ‘அம்முலை வழியே
உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்’ என்கிறபடியே, பாலும் உயிரும் ஒக்க வற்றி வரும்படி சுவைத்தமையைத்
தெரிவித்தபடி. 4‘உயிரோடு குடித்தான்’ என்னக் கடவதன்றோ?
_____________________________________________________
1. ‘பூதனைக்கு நெகிழ்ச்சியுண்டோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘முலையுண்ணும்போது’ என்று தொடங்கி.
2. ஏறிட்டுக்கொண்டு வந்தபடியை
விளக்குகிறார், ‘அகவாயில்’ என்று தொடங்கி.
3. பெரிய திருமொழி,
1. 3 : 1.
4. பாலை உயிரோடு குடித்தமைக்கு மற்றும் ஒரு மேற்கோள் காட்டுகிறார்,
‘உயிரோடு குடித்தான்’ என்று. இது,
விஷ்ணு புரா. 4. 5 : 5.
|