பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
302

மிகு ஞானச் சிறு குழவி - 1இளமைத்தன்மையில் கண்ணழிவற்று இருக்கச்செய்தேயும், சுவை உணர்வாலே, ‘இது தாய் முலை அன்று; வேற்று முலை,’ என்று அமுது செய்தான். 2அன்றிக்கே, ‘அவள் தாயாய் வந்தாலும், இவன் ‘தாய்’ என்றே முலை உண்டாலும், பொருளின் தன்மையாலே வருமது தப்பாதே அன்றோ? அத்தாலே தப்பிற்றித்தனை,’ என்னுதல்.

    படம் நாகத்து அணைக் கிடந்த - 3உணவுக்குத் தகுதியாகக்காணும் கிடந்தபடியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது? நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? 4விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி. 5அன்றிக்கே, ‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டுவிட்டு’ என்கிறபடியே, படுக்கையை விட்டுப் போந்து விரோதியைப் போக்கினபடி’ என்னுதல். 6அடியார்களுடைய

_____________________________________________________

1. ‘‘சிறு குழவி’ என்னாநிற்கச்செய்தே, ‘மிகுஞானம்’ என்றல் பொருந்துமோ?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இளமைத் தன்மையில்’ என்று
  தொடங்கி. என்றது, ‘ ‘மிகுஞானம்’ என்றது, ஈண்டு முற்றறிவினைக்
  கூறவந்ததன்று; சுவையுணர்வினை மாத்திரம் சொல்லுகிறது; அதனாலே,
  ‘வேற்றுமுலை’ என்று அறிந்து உயிரோடு உண்டான்,’ என்றபடி.

2. இனி, ‘மிகுஞானம்’ என்றது, பூதனை பக்கலிலும் ‘தாய்’ என்றே நினைத்து
  முலையுண்ட அறிவைச் சொல்லுகிறது என்று வேறும் ஒரு பொருள் கூறத்
  திருவுள்ளம் பற்றி, ‘அப்படியானால், அவள் முடியவும் இவன் பிழைக்கவும்
  கூடுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி. ‘அத்தாலே’ என்றது, ‘பொருளின் தன்மையாலே’ என்றபடி.
  ‘அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே!’ என்பது தமிழ்மறை. 8. 1 : 4.

3. நஞ்சுமுலை உண்ட பின்பு நச்சரவிலே கிடந்தது, ‘ஸ்தாவரமான விஷத்துக்கு
  ஜங்கமமான விஷம் பரிஹாரம்’ என்னும் நினைவாலே என்று கொண்டு
  அருளிச்செய்கிறார், ‘உணவுக்குத் தகுதியாக’ என்று தொடங்கி.

4. ‘முலை சுவைத்த, படநாகத்தணைக்கிடந்த’ என்று கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘விரோதியை’ என்று தொடங்கி.

5. ‘படநாகத்தணைக்கிடந்த பரம்புருடன் முலைசுவைத்த’ என்று கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. ‘திருவனந்தாழ்வானாகிற
  கட்டிலை விட்டு’ என்பது, ஹரிவம்ஸம், 113 : 62.

6. ‘படுக்கையை விட்டு வரக்கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அடியார்களுடைய’ என்று தொடங்கி. ‘போகம்’ என்றது,
  சிலேடை : ‘பாம்பின்’ உடல் என்பதும், ‘இன்பம்’ என்பதும் பொருள்.