|
New Page 1
பொ-ரை :
தளிர் போன்ற நிறத்தாலே குறைபாடு இல்லாத, தனித்த சிறையிலே பிரசித்தமாக இருந்த கிளி
போன்ற சொற்களையுடைய பிராட்டி காரணமாக, கிளர்ச்சியையுடைய இராவணனது நகரமாகிய இலங்கையை
எரித்த, தேன் பொருந்திய மலர்களையுடைய திருத்துழாய் மாலையானது வாசனை வீசுகின்ற திருமுடியையுடையவனும்,
கடலாற்சூழப்பட்ட இவ்வுலக மக்களிடத்தே திருவருள் மிகுந்தவனுமான சர்வேசுவரன் விரும்பாத அறிவினால்
ஒரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு :
‘குறை இல்லாத கிளிமொழியாள்’ என்றும், ‘விளப்புற்ற கிளிமொழியாள்’ என்றும், தனித்தனியே
கூட்டுக. ‘காரணமாக நகர் எரித்த முடியன்’ என்க.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘பரம காதலனாய் எல்லாரையும் காக்கின்றவனான சக்கரவர்த்தி திருமகன்
விரும்பாத அறிவினால் என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு?’ என்கிறாள்.
தளிர் நிறத்தால்
குறை இல்லா - 2‘தன் திருமேனியின் ஒளியால் எல்லாத் திக்குகளையும் இருள் இல்லாதபடி
செய்கிறவள்’ என்கிறபடியே, பிராட்டி பத்து மாதங்கள் திரு மஞ்சனம் பண்ணாமையாலே திருமேனியில்
புகர் மங்கியிருக்கும்படி, பத்துத் திக்குகளிலும் உண்டான இருளைப் போக்குமளவாயிற்று; 3‘வருத்தம்
இருள் இவைகளைப் போக்க வல்ல பிள்ளை என்று பேர் பெற்ற ஒளி’ என்பது இரகு வமிசம்.
தனிச்சிறையில் - 4ஒளியையும் ஒளியை
_____________________________________________________
1. ‘கிளி மொழியாள் காரணமாக
நகர் எரித்த’ என்றதனைக் கடாக்ஷித்துப்
‘பரமகாதலனாய்’ என்றும், ‘கடல் ஞாலத்து
அளிமிக்கான்’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி, ‘எல்லாரையும் காக்கின்றவனான’ என்றும்
அருளிச்செய்கிறார்.
2. ‘பிரிவு நிலையிலே உள்ள
பிராட்டியின் நிறத்தைத் ‘தளிர் நிறம்’
என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘தன்
திருமேனியின்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. சுந். 15 : 28.
அகஞ்சுரிப்பட்டபடி
- குறைவுபட்டபடி.
3. இருளைப் போக்கும் என்பதற்குப்
பிரமாணம், ‘வருத்தம்’ என்று
தொடங்குவது. இங்கு,
‘இருளைப்போக்க வல்ல’ என்பதுவே வேண்டுவது.
இது, இரகுவமிசம், 10 - 2.
4. ‘பிராட்டி,
இராட்சசிகள் நடுவே இருக்கச்செய்தேயும் ‘தனிச் சிறை’ என்பது
என்?’ என்ன, ‘ஒளியையும்’ என்று
தொடங்கி, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘பிராட்டிக்கு ஸ்ரீராமபிரானுடைய பிரிவை ஒழிய வேறு
தனிமை இல்லை,’ என்றபடி.
|