பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
311

உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற - 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.

    கிளி மொழியாள் காரணமா - திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது. ‘அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி. கிளர் அரக்கன் - ‘கொழுத்தவனான இராவணனுடைய’ என்கிறபடியே, 3தாயும் தமப்பனும் சேர இருக்கப் பொறாதபடியான கிளர்த்தியையுடைய இராவணன். நகர் எரித்த - 4இராவணனுடைய எல்லா

_____________________________________________________

1. விளப்புற்ற என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, சொல்லுதல்; இரண்டாவது,
  பிரசித்தையாயிருத்தல். முதற்பொருளை அருளிச்செய்கிறார், ‘கண்ணீரால்’
  என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா. சுந். 15 : 23.

2. திருவடி வாயிலே ஒன்று தங்கி வந்த அவள் வார்த்தையைக் கேட்ட
  பெருமாள், ‘இனியவள் இனிய வார்த்தையைப் பேசுகின்றவள்’ என்கிறார்.
  நேரே பிராட்டியினுடைய வார்த்தையைக் கேட்கும் போது அவருக்கு
  உண்டாகும் இனிமை சொல்ல வேண்டாவேயன்றோ? ஆதலால், ‘கிளி
  மொழியாள்’ என்கிறது என்றபடி. ‘இனியவள்’ என்று தொடங்கும்
  பொருளையுடைய சுலோகம், ஸ்ரீ ராமா. சுந். 64 : 15.

3. ‘கிளர்’ என்றதனை இராவணனுக்கு அடையாக்கிப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘தாயும் தமப்பனும்’ என்று தொடங்கி. அதற்கு
  மேற்கோள், ‘கொழுத்தவனான’ என்று தொடங்குவது. இது, ஸ்ரீ ராமா.
  அயோத். 1 : 7.

4. ‘கிளர்’ என்றதனை நகருக்கு அடையாக்கிப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘இராவணனுடைய’ என்று தொடங்கி. ‘கிளர்’ என்றது, இராவணனுக்கு
  அடையாகும் போது செருக்கிலே நோக்கு; நகருக்கு அடையாகும் போது
  நிறைவிலே நோக்கு.