|
அற
அறியாதது. என்றது, ‘நாட்டார்
1அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ?
அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி. அகல் ஞாலத்தவர் அறிய - பரப்பையுடைத்தான
பூமியில் அறிவில் குறைவுபட அறிவார் ஒருவரும் இலர் ஆயிற்று; ஆதலால், கல்லைத்துளைத்து நீரை
நிறுத்தினாற்போலே இவர்கள் நெஞ்சிலே படும்படி செய்தானாதலின், ‘அறிவினால் குறை இல்லா அகல்
ஞாலத்தவர் அறிய’ என்கிறது. நெறி எல்லாம் எடுத்து உரைத்த - கர்மயோகம் முதலாகப் பிரபத்தி
யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி. 2ஆத்துமாக்களினுடைய
பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்? ஆதலின், ‘நெறி எல்லாம்’
என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை, ஆத்துமாவினுடைய
உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி,
பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.
3கர்மயோகத்தை
உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை
வை’ என்று கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லுமுகத்தாலே அவதார ரஹஸ்யத்தை
_____________________________________________________
1. ‘அன்னம் பானம் முதலிய
எல்லாவற்றாலும் காரியமுடையவர்களாயிருப்பர்’
என்றது, ‘அவற்றால் பிரயோஜனமுடையராயிருப்பர்’
என்றபடி. ‘ஆக, முதல்
அடியால் சொன்ன பொருள் யாது?’ எனின், ‘பகவத் விஷய ஞானம் நமக்கு
இல்லையே!’
என்று குறைவுபட அறியாதவர்கள் என்றதனைத் தெரிவித்தபடி.
2. ‘நெறி எல்லாம்’ என்ற
பன்மைக்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘ஆத்துமாக்களினுடைய’ என்று தொடங்கி. என்றது,
‘ஆத்துமாக்கள் பல
ஆகையாலே, அந்த அந்தச் சேதநர்க்குக் கர்மத்திற்குத் தகுதியாக ருசி
பேதங்களும்
உண்டேயன்றோ? அந்த ருசிக்கு அநுகுணமாக,’ என்றபடி.
‘அவரவர் தமதம’ என்ற திருப்பாசுரத்தின்
வியாக்கியானத்தை இங்கு
நினைவுகூர்க.
3. ‘கர்மயோகத்தை’
என்றது முதல், ‘பிரபத்தி மார்க்கமுடிவாக
உபதேசித்தபடியைச் சொல்லுகிறது’ என்றது முடிய, பகவத்
கீதையைச் சுருங்க
அருளிச்செய்தபடி. பிரசங்கித்தல் -இடைப்பிறவரலாகச் சொல்லுதல்.
|