|
உப
உபதேசித்து, பின்னர்
ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று
பின்பு பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக
என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று, பின்னர், 1‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின்
சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, 2அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக
அடைவாய்,’ என்றும், 3‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே எவர்கள்
சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே
சொரூப ஞானத்தைப் பிறப்பித்து, 4‘என்னுடைய இந்த மாயைதானே மண், நீர்,
நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’
என்று தொடங்கி, 5‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச்
சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச்
சரீரம் என்று கூறி, அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத்
தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி, 6‘இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’
என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி, 7அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப்
பரிஹாரம் சொல்லி, 8அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும்
_____________________________________________________
1. ஸ்ரீ கீதை, 15 : 4.
2. ஸ்ரீ கீதை, 18 : 62.
3. ஸ்ரீ கீதை, 7 : 14.
அவற்றுக்கு உறுப்பாக - அந்தக் கர்ம ஞான
பத்திகளுக்கு அங்கமாக.
4. ஸ்ரீ கீதை, 7 :
4.
5. ஸ்ரீ கீதை, 7 : 5.
6. ஸ்ரீ கீதை, 3:
1-ஆம் சுலோகத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவைதாம் செய்து
தலைக்கட்டப்போகாது என்று
சொல்லும்படி’ என்கிறார்.
7. ‘அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப்
பரிஹாரம் பண்ணி’ என்றது, ஸ்ரீ
கீதை, 6 : 38-ஆம் சுலோகத்தைத் திருவுள்ளம் பற்றி.
8. ‘அவன் அறியாதே கேட்கமாட்டாதவற்றையும் தானே அறிவித்து’ என்றது,ஸ்ரீ
கீதை, 18 : 64-ஆம் சுலோகத்தைத்
திருவுள்ளம் பற்றி.
|