பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
331

உண

உண்ட சர்வேசுவரனை. விசாலம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட குற்றமில்லாத இசையோடு கூடின மாலையாகிற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப்பத்துத் திருப்பாசுரங்களாலும் காழ்ப்பு ஏறிய இந்தப் பிறவியை நீக்கிக்கொண்டு பரமபதத்தை அடைவார்கள்,’ என்றபடி.

    வி-கு : ‘ஒடுக்கி உண்டான்’ என்க. ‘உண்டானைச் சடகோபன் சொல் மாலை ஆயிரம்’ என்க. ‘பத்தால் அறுத்து நண்ணுவர்’ என்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், காழ்ப்பு ஏறின பிறவியினது கலக்கம் நீங்கிப் பரமபதத்திலே புகப்பெறுவார்கள்,’ என்கிறார்.

    2உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு - கணக்கு இல்லாதவைகளான ஆத்துமாக்கள் நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும். தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை - தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது, ‘செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று எல்லா உலகங்களுக்கும் வேண்டுவனவற்றையெல்லாம் தன் நினைவாலே செய்து, பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது. அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக உணவு முதலானவைகளை உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல். அன்றிக்கே, 3‘எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான அந்தக் கிருஷ்ணபலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாயிருந்து வைத்து, அடியார்கள் சம்பந்தம் உள்ள பொருள்களால் அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

    தடம் குருகூர்ச் சடகோபன் - 4‘அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே, ‘பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோற்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தாற்போலே, இவர்

_____________________________________________________

1. பாசுரத்தின் ஈற்றடியைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘உயிர்’ என்றது, தொகுதி ஒருமை.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 34. இது, பரனாயிருந்து சுலபனானதற்குப்
  பிரமாணம். இதனால், பரத்துவ சௌலப்பியங்கள் இரண்டும்
  சொல்லப்பட்டன.

4. ஸ்ரீராமா. அயோத். 5 : 16. திருவபிஷேகம் - திருமுடி.