பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
333

ஒன

ஒன்பதாம்திருவாய்மொழி - ‘நண்ணாதார்’

முன்னுரை

    ஈடு :  1‘உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ‘ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில் அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 2இந்த அமங்கள வார்த்தையைத் திருமுன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. 3எம்பார், ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்; இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர். 4‘கதையைக் கையிலேயுடையவனாய் நான்கு மந்திரிகளோடு

_____________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார், ‘உடம்பு வேண்டா’ என்றது முதல்
  ‘இத்திருவாய்மொழியில்’ என்றது முடிய. தரவு - சீட்டு.

2. ‘இவர், இறைவன் திருமுன்னர் நின்று ‘சாமாறே பணி கண்டாய்’
  என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இந்த அமங்கள
  வார்த்தை’ என்று தொடங்கி.

3. ‘பகவானைப் பிரிந்து பிரிவாலே நோவுபடுகிற பிரகரணத்தோடு, உலக
  யாத்திரையை நினைத்து, ‘இதனைக் கண்டிராதபடி என்னை அங்கீகரிக்க
  வேணும்,’ என்று கூறுகிற இது பொருந்தாதே?’ என்ன, அதற்கு இரு
  வகையாகச் சமாதானம் கூறுகிறார், ‘எம்பார்’ என்று தொடங்கி.

4. ‘பகவானிடத்தில் விருப்பமில்லாதாரோடு சேர்ந்திருத்தலாகாது,’ என்பதற்கு
  உதாஹரணம் காட்டுகிறார், ‘கதையை’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத்.
  16 : 16. ‘எழுந்தான்’ என்றது, ஸ்ரீ விபீஷணாழ்வானை.

  ‘என்றலும் இளவலும் எழுந்து வானிடைச்
  சென்றனன்’

  ‘அனலனும் அனிலனும் அரன்சம் பாதியும்
  வினைவலர் நால்வரும் விரைவின் வந்தனர்
  கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
  இனைவரும் வீடண னோடு மேயினார்.’

  என்றார் கம்பநாட்டாழ்வாரும்.