பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
335

பரம வள

பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.

    அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் 1‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து, 2 ‘நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க, இவை இங்ஙனம் கிடந்து நோவுபடுகை போருமோ? இவற்றைக் கரைமரம் சேர்க்கவேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க, ‘நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே? நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது? அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு நாம் பார்த்து வைத்த 3வழிகளையடையத் தப்பின பின்பு நம்மாற்செய்யலாவது இல்லைகாணும்; நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.

_____________________________________________________

1. தன்னரசு நாடு - அராஜகமாய் ஸ்வதந்தரமாய் இருக்கிற நாடு.

2. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘அம்மானே!’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘நீ சர்வேசுவரனாய்’ என்றும், ‘கண்ணாளா!’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றிப் ‘பேரருட்கடலாய்’ என்றும், ( கண்-அருள்) ‘அம்மானே!’
  என்றதனையே திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனுமாய்’ என்றும்
  அருளிச்செய்கிறார்.

3. ‘வழிகளையடையத் தப்பின’ என்றது, படைத்தலையும் அவதாரங்களையும்
  நோக்கி.