பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
336

அத

    அதனைக் கேட்ட இவர், ‘நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தையடைந்தேனாவது 1‘இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவுபடுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன, ‘இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று 2நம்மை ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’ ‘உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன, ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் 3தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமைகாணும் கைவாங்கியது; இனி நம்மாற்செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.

    ‘ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும் 4என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘முன்பே உம்மை வாங்கினோமே! 5சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில், இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு

_____________________________________________________

1. ‘ஆயே இவ்வுலகத்து’ என்ற 427ஆம் திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி
  ‘இவர்கள் தம் காரியத்துக்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. விபவம் அர்ச்சை இவைகளிலே தான் அழகு முதலியவற்றோடு கூடியவனாய்
  இவற்றின் கண்முன்னே நின்ற நிற்கின்ற தன்மைகளை நினைத்து, ‘நம்மை
  ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து’ என்றதற்குச்
  சூசகம், ‘அறப்பொருளை அறிந்தோரார்’ என்ற 426ஆம் திருப்பாசுரம்.

3. சமுசாரிகள் நினைவாலே ‘தாழ்ந்திருக்கையாலே’ என்கிறார். அன்றிக்கே,
  ‘இரத்தினத்தோடே பெரிய கல்லை வைத்து நிறுத்தால், கல் வைத்த தட்டுத்
  தாழினும், அத்தாழ்வாலே அக்கல்லிற்கு ஓர் உயர்வு இல்லையாமேயன்றோ?
  அது போன்றது,‘ என்று கோடலுமாம்.

4. ‘ஆங்கு வாங்கு’ (425 பா.) என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘என்னை
  முன்னம் வாங்க வேண்டும்’ என்கிறார்.

5. ‘சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்’ என்றது,
  ‘வேட்கையெல்லாம் விடுத்து’ (429 பா.) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.