|
ந
நான் வரும்படி காலம்
நீட்டியாமல் அடியேனைச் சாகுமாறு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்,’ என்கிறார்.
வி-கு :
‘முறுவலிப்ப ஏங்கத் துயர் விளைக்கும் உலகு’ என்க. ‘உலகு இயற்கை இவை என்ன?’ என்க. என்ன -
எத்தன்மையவாய் இருக்கின்றன? அன்றிக்கே, ‘என்னே!’ எனலுமாம். ‘வரும் பரிசு பணி கண்டாய்’
என்க. கண்டாய் - முன்னிலையசைச்சொல். சாமாறு - உடலை விட்டு உயிர் பிரியும் வழியை. தண்ணாவாது
- காலம் நீட்டியாமல்.
இத்திருவாய்மொழி,
தரவு கொச்சகக் கலிப்பா.
ஈடு :
முதற்பாட்டு. 1‘உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும்
நான் உன் திருவடிகளிலே வந்து கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’
என்கிறார்.
நண்ணாதார் முறுவலிப்ப
- 2ஒருவனுக்கு ஒரு கேடு வந்தவாறே, அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியார்களேயாகிலும்,
அன்றைய தினத்திலே ஒரு வெற்றிலை தேடித் தின்பது, ஓர் உடுப்பு வாங்கி உடுப்பது, சிரிப்பது ஆகாநிற்பர்கள்
ஆயிற்று. நண்ணாதார் - பகைவர். 3பிறர் கேடு கண்டு சிலர் உகக்கும்படியாவதே! இஃது
என்ன ஆச்சரியந்தான்! 4அருச்சுனன், ‘என் பரகு பரகு கெடுவது என்று?’ என்ன, ‘எல்லா
ஆத்துமாக்களுக்கும் சினேகிதனாய் இருக்கிற என்னை!’ என்கிறபடியே, ‘நான் எல்லா ஆத்துமாக்களுக்கும்
சினேகிதன்,’ என்று அறிந்தவாறே நீயும் என்னைப் போன்று என் விபூதிக்குப் பரியத்தேடுவுதிகாண்,’
என்றானே அன்றோ?
_____________________________________________________
1. ‘இவை என்ன உலகு இயற்கை!
உன் கழற்கே வரும் பரிசு சாமாறு பணி’
என்றதனைக் கடாக்ஷித்து, என்பார் நிர்வாகத்திலே அவதாரிகை
அருளிச்செய்கிறார். இவர்கள் - சமுசாரிகள்.
2. முறுவலித்தற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘ஒருவனுக்கு’ என்று
தொடங்கி.
3. ‘நண்ணாதார் முறுவலிப்ப - இவை
என்ன உலகியற்கை?’ என்று
துன்பப்படுகிறவருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘பிறர் கேடு’
என்று தொடங்கி. என்றது, ‘பிறர் கேட்டினைக் கண்டால் அதனை நீக்க
வேண்டியிருக்க, உகக்குமது
பகவானைப் பற்றிய ஞானம்
இன்மையாலேயன்றோ?’ என்றபடி.
4. ‘பிறர்
கேட்டினைக் கண்டால் எப்படி இருக்கவேண்டும்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘அருச்சுனன்’ என்று தொடங்கி. பரகு பரகு -
இராகத்வேஷங்களாலே தடுமாறித் திரிதல். ‘எல்லா ஆத்துமாக்களுக்கும்’
என்று தொடங்கும் சுலோகம், ஸ்ரீ கீதை,
5 : 29.
|