|
நல
நல் உற்றார் -
சர்வேசுவரனே காரணம் பற்றாத உறவாய் அவனைப் பற்றினவர்களையே 1‘அவன் தமர் எவ்வினையராகிலும்
எங்கோன் அவன் தமரே,’ என்று, அவர்களை 2‘ஒருகாலும் பிரிகிலேன்’ என்றிருத்தல்
தகுதியாக இருக்க, சரீரசம்பந்தம் காரணமாக வருகின்றவர்களைக் காரணம் பற்றாத உறவினர்களாக நினைத்து,
அவர்களுக்கு ஒன்று வந்தவாறே, 3‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’
என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படாநிற்பர்களாயிற்று.
‘கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற இரண்டனையுமேயன்றோ? 4‘எல்லா ஆத்துமாக்களையும்
சரீரமாகவுடைய கோபாலனிடத்தில் பகைவன் நட்டோன் என்கிற தன்மை ஏது?’ என்றது, 5‘ஆசையையும்
துவேஷத்தையும் பற்றி வருகையாலே, நட்புத் தன்மையோடு பகைத்தன்மையோடு வாசி இல்லை. 6‘சுகம்
துக்கம் என்கிற பெயரையுடைய இரண்டால் விடப்பட்டவர்கள்’ என்கிறபடியே, ‘சுக துக்கங்கள்’ என்று
சில பெயர் மாத்திரமேயன்றே உள்ளன? உண்மையை
_____________________________________________________
1. ‘அவன்தமர் எவ்வினைய
ராகிலும் எங்கோன்
அவன்தமரே என்றொழிவ
தல்லால் - நமன்தமரால்
ஆராயப் பட்டறியார் கண்டீர்
அரவணைமேல்
பேராயற் காட்பட்டார்
பேர்.’
(முதல் திருவந். 55.)
2. ‘பேராளன் பேரோதும் பெரியோரை
ஒருகாலும் பிரிகிலேனே,’ என்பது
பெரிய திருமொழி.
3. ‘நினைதொறும்
சொல்லுந் தொறும்நெஞ்சு இடிந்துகும்
வினைகொள்சீர்
பாடிலும் வேம்எனது ஆருயிர்’
என்பது திருவாய்மொழி, 9. 6
: 2.
4.
‘பகைமைதான் கூடாது; இரங்குதல் நல்லதேயன்றோ?’ என்ன, ‘இரண்டும்
தியாஜ்யமேயாம்’ என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘எல்லா
ஆத்துமாக்களையும்’ என்று தொடங்கி, இது, ஸ்ரீ விஷ்ணு புரா.
1. 19 : 31.
இரணியனைப் பார்த்துப் பிரஹ்லாதாழ்வான் கூறியது.
5. ‘இரண்டும் தியாஜ்யம்
என்கைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஆசையையும்’ என்று தொடங்கி.
6. ‘வேற்றுமை
இல்லை என்னலாமோ? நட்பு உத்தேஸ்யம் அன்றோ?’ என்ன,
‘சுகம் அநுகூலமாயிருக்க, துக்கத்தைப்
போன்று, அதுவும் தியாஜ்யம்
என்னாநின்றதேயன்றோ?’ என்று அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘சுகம்
துக்கம்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை, 15 : 5. இங்கு, ‘இருள்சேர்
இருவினையும்
சேரா’ என்ற திருக்குறளின் பொருளினை நினைவு கூர்தல்
தகும்.
|