|
New Page 1
நோக்குங்கால், இரண்டும்
துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
1‘ஸ்ரீராமபிரானையே
நினைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் நலியவில்லை,’ என்கிறபடியே, திருவயோத்தியையில் உள்ளார்,
ஒருவரை ஒருவர் வேரோடே வாங்கிப் போகட வேண்டும்படியான பகைமை தொடர்ந்து நிற்கச் செய்தேயும்
எல்லாரும் ஒரு மிடறாக விரும்பினார்கள்; ‘அதற்கு அடி என்?’ என்னில், பகைமை நெஞ்சிலே பட்டு
அவர்களை நலிய நினைத்த போதாகப் பெருமாளை நினைப்பார்கள்; ‘அவர் முகம் சுளியும்’ என்னுமதனாலே
அதன் காரியம் பிறக்கப் பெற்றது இல்லை.
எண் ஆராத் துயர்
விளைக்கும் - முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும் இரண்டு துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு.
அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று
இருப்பது; அதனால் ‘எண் ஆரா’ என்கிறார். பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக
இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று. 2‘இராச்சியத்தினின்று
நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு
) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட
_____________________________________________________
1. ‘‘எல்லா ஆத்துமாக்களுக்கும்
சினேகிதன் சர்வேசுவரன்’ என்று அறிந்து
துவேஷத்தை விட்ட பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘ஸ்ரீ ராமபிரானையே’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
யுத். 131 : 95.
2. இன்னார்க்குத் துயர்
விளைக்கும் என்று விசேடித்துக் கூறாமையாலே,
கர்மங்கட்குக் கட்டுப்படாத சர்வேசுவரன் அவதரித்தாலும்
அவனுக்கும்
துக்கத்தை விளைக்கக் கூடியது என்று கூறத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்கிறார்,
‘இராச்சியத்தினின்று’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
ஆரண்ய. 67 : 24.
‘ராஜ்யாத் ப்ரம்ஸ:’ என்ற
மேற்சுலோகத்திற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருள் வருமாறு : திருவபிஷேகம் பண்ண நான்
இட்டவாறே, ‘ராஜ்யம் எனக்கு வேணும்’ என்றார் சிலர். அத்தை இழந்தால்
படை வீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் ஆமிறே, ‘என் மகன் ராஜ்யம்
பண்ண வேண்டா; பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே
இருக்க
அமையும்,’ என்றாளிறே ஸ்ரீ கௌசல்யை. சீதா நஷ்டா - பிராட்டியும்
தாமுமாய் ‘ஏகாந்தமாகப் புஜிக்கலாம்’ என்று போர, இருவரும் இரண்டு
இடத்திலேயாம்படி விழுந்தது. பிராட்டிக்குத் தனியிடத்திலே
உதவப் புக்க
பெரிய உடையாரையும் இழந்தது. * ‘ ‘ராஜ்ய நாசோ பஹர்ஷதி’ என்றும்,
‘வனவாசோ மஹேநதய:’ என்றும் சொல்லிப் போந்தவற்றை இப்போது
அநர்த்தமாகச் சொல்லுகிறது என்?’ என்னில்,
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்துக்கும்,
ரிஷிகளை எடுக்கைக்கும் என்றிறே போந்தது; அத்தோடே
விரோதிக்கையாலே
சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும்,
பெரியவுடையார் இழவு பலிக்கையாலும், இவற்றுக்கு
அடியானவையும்
இப்போது அநர்த்தமாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறார். இவ்விரண்டாலும்
வரும்
துக்கங்களையடைய நினைக்கிறது. நிர்த்தஹேதபிபாவகம் - பிரியாத
இளையபெருமாளையும் பிரிக்க வற்றாயிறே
இருக்கிறது.
‘இப்பொழுது எம்ம
னோரால் இயம்புதற் கெளிதே யாரும்
செப்பருங் குணத்தி ராமன்
திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பவ்
வாசகம் உரைக்கக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா
மரையினை வென்ற தம்மா!’
என்ற கம்பராமாயணச் செய்யுள்
நினைவிற்கு வருகின்றது.
|