பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
341

எர

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

    2‘சர்வேசுவரன் பெரிய பிராட்டியாரோடு பரிமாறும் போது மற்றுள்ள பிராட்டிமார் மலர் சந்தனம் முதலியவைகளைப் போன்று இன்பத்திற்கு உறுப்பான பொருள்களின் கோடியிலே சேர்ந்திருப்பார்கள்; மற்றைப்பிராட்டிமார்களோடு பரிமாறும் போது பெரிய பிராட்டியார் தம்மோடு பரிமாறுவதைப் போன்றே நினைத்து மகிழாநிற்பார்;’ 3‘திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்?’ என்கிறபடியே, அவர்களோடு இவன் பரிமாறும்போது பிராட்டிக்கே அற்றானாய் இருக்கும்; அதற்கு அடி, அதனால் பிறக்கும் முகமலர்ச்சி

_____________________________________________________

1. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘இவர்கள் படுகிற துக்கத்தை’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. ‘இந்தத்தன்மை இவ்வுலகத்தில் மாத்திரமன்றிக்கே, பரமபதத்திலும் உண்டு,’
  என்கிறார், ‘சர்வேசுவரன்’ என்று தொடங்கி. பட்டர் அருளிச்செய்த
  ஸ்ரீகுணரத்ந கோசத்தில் 26ஆம் சுலோகத்தை இங்கே அநுசந்திக்கத்தகும்.

3. மற்றைப் பிராட்டிமாரோடு பரிமாறும் போதும் பெரிய பிராட்டியார் மகிழ்வர்
  என்பதற்குப் பிரமாணம், ‘திருமகளும்’ என்று தொடங்குவது. இது, முதல்
  திருவந். 42.
இந்தப் பாசுரத்திற்கு பாவம் ‘அவர்களோடு’ என்று
  தொடங்கும் வாக்கியம்.