|
அவள
அவள் பக்கல் காண்கையாலே.
1உயர் குணங்கள் பல பொருந்தியிருந்த ஸ்ரீ கௌசல்யையார் தமக்கு என ஒரு தன்மை இன்றிக்
காலந்தோறும் காலந்தோறும் சக்கரவர்த்தியின் நினைவுக்குத் தகுதியாக மற்றைய மனைவிமார்களுக்கு
விரோதவுணர்ச்சி தோன்றாதவாறு பரிமாறிப் போந்தாரே அன்றோ? இவை என்ன உலகு இயற்கை -
2உன்னை ஒழியப் புறம்பேயும் இந்த உலகப்பேறு இழவு ஆம்படி இது ஒரு உலக ஒழுக்கினை நீ
பண்ணி வைத்தபடி என்? பிரானே! ‘நாம் பண்ணுகையாவது என்? இவர்கள் தாங்கள் செய்த கர்மங்களினுடைய
பலம் தொடர்ந்து வருகிறது இத்தனையன்றோ? நம்மால் வந்தது அன்றுகாணும்,’ என்று பகவானுடைய அபிப்பிராயமாக,
அருளிச்செய்கிறார் மேல் :
3கண்ணாளா
- இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில், உன்
கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் - அருளை உடையவன். அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’
என்னக்கடவதன்றோ? அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை
ஆளுகின்றவனே!’ என்னுதல். அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய்
இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல். கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர்.
‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி நாம்
உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் மேல் :
_____________________________________________________
1. ‘மஹிஷிகளுக்குள்
விரோதவுணர்ச்சி இல்லாதவாறு இருத்தல் கூடுமோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘உயர் குணங்கள் பல’ என்று
தொடங்கி. இங்கே, ஸ்ரீராமாயணம், அயோத்தியா காண்டம்,
12ஆம்
சர்க்கத்தின் 68ஆம் சுலோகம் அநுசந்தேயம்.
2. ‘இவை என்ன உலகியற்கை!’
என்று கூறுகின்றவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘உன்னை ஒழிய’ என்று தொடங்கி.
3. ‘கண்ணாளா’
என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
‘இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல்’
என்றது, தாம் தாம் செய்த
கருமங்களைத் தாம் தாமே போக்கிக் கொள்ள முயற்சி செய்தலைக்
குறித்தபடி.
|