பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
343

கடல

    கடல் கடைந்தாய் - ‘தூர்வாச முனிவரது சாபத்தால் வந்த கேட்டினைத் தப்புகைக்கு வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்கும் அரியன செய்து உதவுமவன் அன்றோ?’ என்கிறார். ‘நன்று; அவர்களுக்கு இச்சை உண்டு; இச்சை இல்லாதவர்களுக்கு நம்மாற்செய்யலாவது உண்டோ?’ என்ன, ‘ஆகில், இவர்கள் நடுவே இராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி செய்ய வேண்டும்,’ என்கிறார் மேல் :

    உன கழற்கே வரும் பரிசு - 1விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை. இவர்க்குக் 2காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன். தண்ணாவாது - தாழாது; தண்ணாக்கை - தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது; செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ‘அடியேனை’ என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி. பணிகண்டாய் சாமாறே - பணிக்கை -சொல்லுகை; 3சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது? அன்றிக்கே, 4‘சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.

    அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல். ‘நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று 5இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில், 6‘கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்

_____________________________________________________

1. விலக்கடிகள் - செல்வம் முதலானவைகள்.

2. காற்கூறு - திருவடிகளாகிற பாகத்தில் என்பது பொருள். ‘ஒன்றில் நாலில்
  ஒரு பாகம்’ என்பது வேறும் ஒரு பொருள்.

3. ‘சொல்லுதல் நினைவோடேயன்றோ கூடி இருப்பது?’ என்றது
  ‘சொல்லுதலுக்கு அடியான நினைவினைச் சொல்லுகிறது,’ என்றபடி ‘நான்
  சாமாறு நீ சங்கற்பிக்க வேணும்,’ என்றவாறு.

4. ‘சாமாறு பணிக்க வேணும்’ என்றது, ‘சொல்லவேண்டும்’ என்றபடி.

5. ‘இவ்வளவை’ என்றது சரீரத்தின் பிரிவினை.

6. சௌனக சம்ஹிதை.