பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
345

New Page 1

மேற்படச் சில வகைகளும் உளவோ?’ என்னில், ‘பல காலம் 1ஒருபடிப்பட வாழக்கடவனாகவும், தன்னோடு ஒக்க வாழ்வாரை அழியச் செய்யக் கடவனாகவும் கோலிக் கொண்டு போகாநிற்க, நினைவு அற முடிந்துகொடு நிற்கும்படியும், நான்கு 2சின்னம் கைப்பட்டவாறே, ‘இனி, நமக்கு உள்ளதனையும் வாழ்வதற்கு ஒரு குறை இல்லை’ என்று நினைத்திருக்கச்செய்தே, அதனை இழந்து துன்பப்பட்டுக் கூப்பிடும்படியும் எனச் சில உளவே அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி.’ 3ஒருவன் தன் சாக்காட்டிற்கும் இசைவான், தன் கையில் அகப்பட்ட பொருள் தப்பினால்; 4அதனையே அன்றோ இவன் தஞ்சமாக நினைத்திருப்பது? ஆதலின், சாதற்குப் பின் ‘கெடுதலை’ வைத்து ஓதுகின்றார். 5ஒருத்தனை ‘ராஜத்துரோஹி’ என்று கையையும் காலையும் தரிக்க, இவனை வினவப் புகுந்தவர்கள், ‘இப்படிப்பட்டது வரல் ஆகாதே!’ என்ன, ஆயிரம் ஐந்நூறு என்று காசு சில தா,’  என்னாதே இவ்வளவோடே போயிற்று உங்கள் அநுக்கிரஹமே அன்றோ?’ என்றானாம்.

    6இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின; 7‘நின்னலால் இலேன்காண்’ என்றும், 8‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ 9‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும், ‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’

_____________________________________________________

1. ஒருபடிப்பட - துன்பம் கலத்தலின்றிக்கே சுகமேயாகும்படி.

2. சின்னம் - காசு.

3. ‘‘கெடுமாறும் சாமாறும்’ என்னாது, ‘சாமாறும் கெடுமாறும்’ என்று
  சாவிற்குப் பின் கேட்டினைச் சொல்லுவான் என்?’ எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஒருவன்’ என்று தொடங்கி. என்றது,
  ‘சாதலைக்காட்டிலும் செல்வத்தின் அழிவே துக்கமாயிருக்கும்,’ என்பது
  கருத்து.

4. ‘அதற்குக் காரணம் என்?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘அதனையேயன்றோ’ என்று தொடங்கி. அதனை - செல்வத்தை.

5. தஞ்சமாக நினைத்திருப்பதற்கு ஒரு சம்வாதம் காட்டுகிறார், ‘ஒருத்தனை’
  என்று தொடங்கி.

6. ‘உலக மக்களை இங்ஙனம் நிந்திப்பதற்குத் தமது தன்மை யாது?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவர்’ என்று தொடங்கி. இவர் -
  ஆழ்வார்.

7. திருவாய், 2. 3 : 7. 

8. திருவாய், 6. 9 : 9.

9. திருவாய். 6. 9 : 8.