பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
346

என

என்றும், ‘இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது. 1‘அடியவனான என்னைத் தேவரீர் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருளவேண்டும்; என்னை அழைத்துக்கொண்டு போவதில் பாவம் இல்லை; தேவரீருக்கே பயன் கிடைக்கின்றது; நான் தேவரீருக்குக் கைங்கரியத்தைச் செய்து அதனால் பயனை அடைந்தவன் ஆகப் போகிறேன்,’ என்றும், 2‘ஸ்ரீராமரே! உம்மோடு கூடி வசிக்கும் இடம் எதுவோ, அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்து வசிக்கும் இடம் எதுவோ அது நரகம் என்று எண்ணுகின்ற எனது சிறந்த பிரீதியை அறிந்தவரான நீர் என்னுடன் புறப்படும்,’ என்றும், இவற்றை விநாசமும் கேடுமாகவேயன்றோ இவர்கள் நினைத்திருப்பது? 3இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்? ‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

    தமர் உற்றார் - சரீரசம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; 4இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு. தலைத்தலைப்பெய்து - மேல் விழுந்து மேல் விழுந்து. ஏமாறிக் கிடந்து அலற்றும் - 5‘ஏ’ என்று ஏக்கமாய்,

_____________________________________________________

1. பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’ என்பதற்கும், ‘இதர
  விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம்,’ என்பதற்கும் வேறு
  பிரமாணங்களையும் காட்டுகிறார், ‘அடியவனான’ என்று தொடங்கி. இது,
  ஸ்ரீராமா. அயோத். 31 : 22.

2. ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

3. ‘சாமாறும் கெடுமாறும்’ என்கிறவருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘இவர்கள்’ என்று தொடங்கி. ‘இவர்கள்’ என்றது,
  உலகமக்களை. ‘என் ஒருவர்’ என்று தொடங்கும் பாசுரம், முதல் திருவந்.
 
95. ‘இவர்கள்’ என்றது, ஆழ்வார்களை.

4. இஃது ஒழிய - இந்தத் தமர்களையும் உற்றார்களையும் ஒழிய. ‘தமர்கள்
  தமர்கள்’ என்று தொடங்கும் பாசுரம், திருவாய்மொழி, 8. 10 : 9.

  இவர்க்கு - ஆழ்வார்க்கு.

5. ‘ஏமாறி’ என்பதற்கு, ‘ஏங்காதே’ என்றும், ‘துக்கித்து’ என்றும், ‘கலங்கி’
  என்றும் மூன்று வகையான பொருள் அருளிச்செய்கிறார், ‘ஏ’ என்று
  தொடங்கி. இரண்டாவது பொருளுக்கு மேற்கோள், ‘ஏமாற்றம்’ என்று
  தொடங்குவது. இது, பெரியாழ்வார் திருமொழி,  2. 7 : 8.