|
தவத
தவத்தைச் செய்தவர்களும்;
1‘நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என்று எண்ணிப்-பிறியாது,
பூங்கொடிக்கள் வைகும்’ என்னக் கடவது அன்றோ? அங்கு அவனை இல்லார் - அவன் திருவருள் இல்லையாகில்
தானே சித்தியாது. அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் - ‘இதற்கும்
ஆள் பற்றுவதே!’ என்பர்
பட்டர்.
குடிகளினது நெருக்கத்தையுடைத்தாய்; நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இனிமையையுடைத்தான
சுவர்க்கத்தை அடைந்தாலும். மீள்வர்கள் - மீளுவார்கள்; 2புண்ணியம் குறைந்தவாறே
‘த்வம்ச’ என்று தள்ளுவார்கள் அன்றோ?
மீள்வு இல்லை -
அங்ஙனம் ஒரு மீட்சி இல்லை. என்றது, ‘அப்படி அவனுடைய புண்ணியத்திற்குக் குறைவு இல்லையே’ என்றபடி.
3‘புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே’ என்பர்
பட்டர் பிரான்.
கொடி மன்னு புள் -கொடியாய் மன்னாநின்றுள்ள பறவை. என்றது,
தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘அல்லாதாரைக்காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில்,
அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் 4பக்ஷபாதமும் அதற்கு அடி. புள்ளுடை அண்ணல் - ‘திருமகள்
கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமேயன்றோ
அவன்? அண்ணல் - தலைவன். கழல்கள் குறுகுமின் - உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள்.
‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில். இங்கே,
‘புள்ளுடை அண்ணல் கழல்கள்
_____________________________________________________
1. சரீரத்திலே தூறு மண்டும்படி
தவம் செய்தலுக்கு மேற்கோள், ‘நெறியார்’
என்று தொடங்கும் பாசுரம். இது, இரண்டாந்திருவந்.
53.
2. தேவர்கள் தன்மையைச்
சீவகசிந்தாமணி முத்தி இலம்பகத்தில் 202 முதல்
213 முடிய உள்ள செய்யுள்களிற்காண்க.
3. பெரியாழ்வார் திருமொழி,
4. 5 : 2.
4. பக்ஷபாதம் என்றது, சிலேடை.
|