|
New Page 1
குறுகுமினோ’என்கிறார்காணும்,
1அவளோபாதி 2இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.
(9)
342
குறுக மிகஉணர் வத்தொடு
நோக்கிஎல் லாம்விட்ட
இறுகல் இறப்பெனும்
ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவதுஓர் பாசம்உண்டாம்;
பின்னும்வீ டுஇல்லை,
மறுகல்இல் ஈசனைப்
பற்றி விடாவிடில், வீடுஅஃதே.
பொ-ரை :
‘(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து
நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக
நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக்
காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும்
இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால்,
மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும் என்றபடி.
வி-கு :
‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க. உணர்வு
- ஞானம்; ஆத்துமா. இறுகல் - இறுகப்பிடித்தல். இறப்பு - மோக்ஷம். பாசம் - பற்று. மறுகல் -
குற்றம். ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக. இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை.
‘அஃதே வீடு’ என மாறுக.
ஈடு :
பத்தாம் பாட்டு. 3‘பூமியில் ஐஸ்வர்யம்,
சுவர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் மேல்;
_____________________________________________________
1. அவளோபாதி -
அவளைப்போன்று. இவ்வழக்குப் பழைய
உரைகளிற்காணலாகும்.
‘களிறு பல பூட்டி’ என்றது,
அவன் ஏறும் யானைகளை அவனை
அவமதித்துச் சாட்டிற்குக் கடாவோபாதி பூட்டி என்றவாறு,’ என்பது பதிற்றுப்
பத்துப் பழைய உரை. (செய். 44.)
2. ‘இவனும்’ என்றது, பெரிய
திருவடியை.
‘அவன், மடிமேல் வலந்தது
பாம்பு’
என்ற பரிபாடற்பகுதியையும் ‘இன்னும்
அது கடவுட்கொடி என்பது தோன்ற
‘அவன்’ என உயர்திணையாற்கூறினார்’ என்ற அதன் உரையையும்
ஈண்டுக்காணல் தகும்.
அங்குத்தைக்கு - அவ்விடத்திற்கு.
3. ‘இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்’ என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘ஒரு
நன்மை’ என்றது, நித்தியத்துவம் முதலாயினவற்றை. தண்ணிது -
மிகச்சிறியது.
|