பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
359

தவ

தவிர்ந்து, தாம் வாழ்வதன்பொருட்டுப் பிறரைத் துன்புறுத்துகின்ற சமுசாரிகள் நடுவினின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

    முதல் அடியாலே, கிராமணிகள் செல்வத்தைத் தேடிச் சேர்க்கும்படியை அருளிச்செய்கிறார்: மறுக்கி - சாது என்று தோற்ற வாழ்கின்ற ஒருவன், ஒரு தேசத்திலே வாழா நின்றால், அச்சம் இன்மைக்காகப் பற்றுக்கோடாக ஒருவனைப் பற்றியிருக்கவேண்டும்,’ என்று ஒரு கிராமணி பக்கல் சென்று சேர்வான்; ‘இவன் சாது’ என்று அவனுக்குத் தோற்றினவாறே, ‘உன்னை இன்னாரும் இன்னாரும் இன்னபடி சொன்னார்களே!’ என்பான்; அவன் அஞ்சினவனாய், ‘இவன் நம்மைப் பாதுகாப்பவன்’ என்று இவனை அவன் நம்பினபடியாலே, ‘அதற்குப் பரிஹாரம் என்?’ என்று இவன்தன்னையே கேட்பான்; ‘உனக்கு ஒன்று வந்தால் சொல்லலாவது இல்லாதபடி என் வீட்டிலே உனக்குள்ள செல்வத்தையும் போகட்டு உன் நிலம் முதலாயினவற்றையும் என்மேலே 1திரிய விட்டு வை,’ என்பான்; இப்படி அவன் நெஞ்சைக் கலங்கச் செய்து. 2வல் வலைப் படுத்தி - இவன் இனி இவை கொண்டு தப்ப ஒண்ணாதபடி தன் பக்கலிலே அகப்படுத்தி. குமைத்திட்டு - பின்னர் இவன் கொடுத்த செல்வத்தை அடையத் தன் பேரிலே செலவு எழுதிச் 3சிகைக்கு அடிப்பிக்கும். கொன்று - ‘இவன் இருக்குமாகில் ஒரு நாள் வரையில் சிலரை அடைந்து தொடரிலோ?’ என்று இவனைக் கொல்லுவான். உண்பர் - இப்படிச் செய்தால் தான் செய்வது வயிறு வளர்க்கையே அன்றோ?

    அறப்பொருளை அறிந்து - ‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே 4தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து. ஓரார் - அதனுடைய

_____________________________________________________

1. திரியவிட்டு - ஏறிட்டு எழுதி. என்பது, தன் பேரில் எழுதிய பத்திரங்களை
  வேறு ஒருவன் பேரில் எழுதுதல்.

2. வல்வலை - வலிதான வலை. வலையின் தன்மையைப் பற்ற, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இவன்’ என்று தொடங்கி. ‘தீவினை முதிர்வலைச்
  சென்றுபட்டிருந்த, கோவலன்’ என்பது சிலப்பதிகாரம்.

3. சிகைக்கு - வட்டிக்கு.

4. தட்டுப்படும் - தர்மம் ஆகாமல் அதர்மமாகவே முடிவுறும்.