பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
360

தன

தன்மையிலே முதலிலே இழியார்கள். அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்; ஓர்தல் - ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி. 1அன்றிக்கே, ‘செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி. நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல். இவை என்ன உலகு இயற்கை - இது ஒரு உலகவாழ்வு இருக்கும்படியே பிரானே! வெறித் துவள முடியானே - வாசனையையுடைய திருத்துழாயை முடியிலே உடையவனே! என்றது, ‘இம்மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!’ என்றபடி.

    வினையேனை - 2ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை. உனக்கு அடிமை அறக்கொண்டாய் - நான் நின்ற நிலைக்குச் சேராதபடியான உன் திருவடிகளில் அடிமையை 3ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய். இனி -அடிமை கொண்ட பின்பு. என் ஆர் அமுதே - எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே! கூய் அருளாயே - நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக்கொண்டருள வேண்டும். 4அன்றிக்கே, ‘இனி என் - அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக்

_____________________________________________________

1. ‘அன்றிக்கே’ என்று தொடங்கிக் கூறும் பொருளுக்கு, ‘அறப்பொருளை
  அறிந்து’ என்பதனை, ‘பொருளை அற அறிந்து’ எனப் பிரித்துக் காட்டுக.

2. ‘அறப்பொருளையறிந்து ஓரார்’ என்பதற்கு அருளிச்செய்த மூவகைப்
  பொருள்களில், இரண்டாவது பொருளிலே நோக்காக அருளிச்செய்கிறார்,
  ‘ஐம்புல இன்பங்களிலே’ என்று தொடங்கி.

3. ‘அறக்கொண்டாய்’ என்பது, ‘அற’ என்பதற்கு, ‘ஒரு காரணம் அற’ என்று
  பொருள் கொண்டு, அதனை அருளிச்செய்கிறார், ‘ஒரு காரணமும் இன்றியே’
  என்று.

4. ‘கூய் அருளாய்’ என்பதற்கு, ஆழ்வான் நிர்வாஹத்துக்குச் சேரப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. கரைந்ததற்கு -
  வருந்தியதற்கு. ‘அதனை விடலாகாதோ?’ என்பதற்கு, ‘அதனை விட்டு
  நீங்கினால் என்ன?’ என்பது பொருளாகக் கொள்க. அதாவது, ‘அவர்கள்
  செயலைக் கண்டு வருந்துதலை நீக்கினால் வரும் குற்றம் யாது?’ என்றபடி.