பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
365

New Page 1

போதரும். நீ கரந்து உமிழும் - படைத்தவனான நீயே பிரளயம் வந்தவாறே உள்ளே வைத்துக் காப்பாற்றி, அது கழிந்தவாறே வெளிநாடு காண உமிழுகின்ற, அன்றிக்கே, 1‘நீ கரந்து காட்டி, உமிழ்ந்து காட்டும்’ என்னலுமாம். நிலம் நீர் தீ விசும்பு கால் - இப்படி உண்பது உமிழ்வதான மண் முதலான ஐந்து பூதங்களாலே. ஈட்டி - திரட்டி, 2திரிவிருத்கரணத்தைச் சொன்னபடி. 3‘மண் முதலிய பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து எல்லாவற்றிலும் எல்லாம் உள்ளன,’ என்கிறபடியே, இவை தனித்தனியும் காரியத்தைப் பிறப்பிக்க மாட்டா; கூடினாலும் எல்லாம் ஒத்ததாய் நிற்கில் காரியம் பிறப்பிக்க மாட்டா; 4செதுகையும் மண்ணையும் நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியனவற்றைச் செய்யுமாறு போலே, தேவர்கள் முதலான பல காரியங்களும் பிறக்கும்படி முக்கியப் பொருள்களாகவும்

____________________________________________________

1. ‘நீ கரந்து காட்டும், உமிழ்ந்து காட்டும் என்னலுமாம்’ என்றது, ‘அவற்றை
  ஒரு சொல் நீர்மையனவாகக் கோடல் வேண்டும்’ என்றபடி. கரந்தும்
  உமிழ்ந்தும் என்பன பொருள். கரத்தல் -அழித்தல். உமிழ்தல் - படைத்தல்.

2. திரிவிருத்கரணம் - பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல்.
  திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.
  பஞ்சீகரணமாவது, ஐம்பெரும்பூதங்களையும் கூட்டுதல். கூட்டுதலாவது,
  ஆகாசம் முதலிய பூதங்கள் ஐந்தனையும் தனித்தனியே இரண்டு கூறாக்கி,
  அவற்றில் ஒவ்வொரு கூற்றையும் நான்கு கூறாக்கி, மற்றைப் பூதங்களில்
  ஒவ்வொரு கூறு கூட்டிவிடுதல். இதனால், எல்லாப் பூதங்களிலும் எல்லாக்
  குணங்களும் கலந்து நிற்கும்.

  ‘நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
  கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’

  என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், சூத். 91.

3. ‘பஞ்சீகரணம் வேண்டுமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘மண் முதலிய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 2 : 54.

4. பஞ்ச பூதங்களும் ஒன்றோடொன்று கலக்கும்போது பிரதான
  அப்பிரதானங்களாய்க் கலப்பதனால் காரியம் உண்டாகிறது என்பதனைத்
  திருஷ்டாந்த மூலம் விளக்குகிறார், ‘செதுகையும்’ என்று தொடங்கி. செதுகை
  - பதரும் கூளமும். ‘இவை கூடினாலல்லது காரியகரம் ஆகாமையாலே,
  மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு திரவியமாக்கிச் சுவர்
  இடுவாரைப் போலே ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர்
  அண்டமாக்கி அதுக்குள்ளே சதுர்முகனைச் சிருஷ்டித்தருளும்,’ என்பது,
  தத்துவத்திரயம், அசித் பிரகரணம், சூ. 34.