|
New Page 1
முக்கியம் இல்லாத
பொருள்களாகவும் 1நிற்கும். 2ஒன்றற்கு ஒன்று காரணம் ஒரே தன்மையாய்
நிற்கில் காரியமும் ஒரே தன்மையாய் இருக்குமே அன்றோ?
ஆக, இப்படி இவற்றைத்
திரட்டி இவற்றாலே, நீ வைத்து அமைத்த - நீ சமைத்து வைத்த. இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற்கழித்து - பிரமன் முதலானோர் 3வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற
கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு. 4கோட்டை என்பது, புறம்புள்ளாரால்
புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே, புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய்
இருக்குமே அன்றோ? அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது.
5‘என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?
என்னை - இக்கோட்டையிலே
அகப்பட்டுப் புறப்பட வழி அறியாதிருக்கிற என்னை. அன்றிக்கே, 6‘எவர்கள் என்னையே
சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்,’ என்று நீ சொன்னபடியே உன்னையே
பற்றின என்னை’ என்னுதல். ‘இதனைக் கழித்து உம்மைக் கொடு போகச் சொல்லுகிறது எங்ஙனே?’ என்ன,
அருளிச்செய்கிறார் மேல்: உன் கொழுஞ்சோதி உயரத்து - சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாததாய்ச்
சுத்த சத்துவமயமாய் எல்லை இல்லாத
____________________________________________________
1. ‘நிற்கும் எவை?’ எனின்,
‘ஐம்பெரும்பூதங்கள்’ என்க.
2. ‘பிரதான பாவம் ஆனால்,
என்னை?’ என, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஒன்றற்கு ஒன்று’ என்று தொடங்கி. ‘காரியமும்
ஒரே
தன்மையாயிருக்குமேயன்றோ?’ என்றது, ‘காரியத்திலே வேற்றுமையின்றிக்கே
இருக்கவேண்டுமேயன்றோ?’
என்றபடி. ஆகையால், ‘தேவர்கள் முதலான’
என மேலே உள்ள வாக்கியத்தோடு இதனைக் கூட்டுக.
3. ‘வன்னியம் செய்கிற’ என்றது,
‘வாழ்’ என்ற சொல்லின் பொருள். வன்னியம்
செய்தல் - சிற்றரசர்களாய் இருந்துகொண்டு அரசாட்சி
செய்தல்.
4. ‘புறப்பட விட வேண்டுமோ?
தானே புறப்பட்டால் ஆகாதோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கோட்டை என்றது’ என்று
தொடங்கி.
5. ‘இதுவும் அப்படிப் புறப்பட
ஒண்ணாததோ?’ என்ன, ‘என்மாயை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, ஸ்ரீ
கீதை, 7 : 14.
6. ஸ்ரீ
கீதை.
|