|
New Page 1
தேஜோரூபமான பரமபதத்திலே.
கூடு அரிய திருவடிக்கள் - தன் முயற்சியால் அடைய முடியாதனவான திருவடிகளை. எஞ்ஞான்று கூட்டுதி -
1‘துக்கியாதே’ என்று ஒரு வார்த்தையைச் சொல்லிலும் 2 ‘மனம் நிறைவு
பெற்றவனாய் இருக்கிறேன்’ என்று இருக்கலாய் அன்றோ இருப்பது? அப்படியே, ‘நான் கூட்டக் கடவேன்’
என்று ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேண்டும். 3‘பிறகு ஸ்ரீ பரதாழ்வான் பாதுகைகளைத்
தலையில் வைத்துக்கொண்டு அப்போது ஆனந்தமடைந்தவராய்ச் சத்துருக்னாழ்வானோடு கூடினவராய்த் தேரில்
ஏறினார்’ என்னலாம்படி ‘பதினான்கு வருஷங்களும் முடிந்து வருகிறேன்’ என்றதைப் போன்று வார்த்தை
அருளிச்செய்தருளவேண்டும்.
4‘இதனைக்
கழிக்க வேண்டும்’ என்று இருக்கிற என்னை, எஞ்ஞான்று கூட்டுதி - ‘நீ உகந்தாரைக் கொடு போய்
வைக்கும் தேசத்திலே, அளவிலாத ஆற்றலையுடையனான நீயே என்று கொடுபோய் வைக்கக்கடவை?’ என்றது,
‘இக்கோட்டை இட்ட இவன்தானே கழிக்க வேண்டும்?’ என்றபடி. 5‘எவர்கள் என்னையே
சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்’, 6‘அந்தச்
சர்வேசுவரனையே சரணமாக அடைவாய்; அவன் திருவருளாலே பரமபதத்தை அடைவாய்,’
____________________________________________________
1. ‘கூட்ட வேணும்’ என்னாதே,
‘எஞ்ஞான்று’ என்பதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘துக்கியாதே’ என்று தொடங்கி. இது,
ஸ்ரீ கீதை, 18 : 66.
2. ஸ்ரீ கீதை, 13 :
73.
3. ‘எஞ்ஞான்றும்’ என்கையாலே,
கால அளவு பெற்றால் தரிக்கலாம்
என்னுமிடம் சித்திக்கிறது என்று கொண்டு, ‘அங்ஙனம் கால
வரையறை
பெற்றுத் தரித்திருந்தவர்கள் உளரோ?’ எனின், ‘உளர்’ என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார்.
‘பிறகு ஸ்ரீ பரதாழ்வான்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ
ராமா, அயோத். 112 : 25.
4. ‘என்னை உன்
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிக்கள்
எஞ்ஞான்று கூட்டுதி?’ என்பதற்குப் பொருள்
அருளிச்செய்கிறார், ‘இதனைக்
கழிக்கவேண்டும்’ என்று தொடங்கி.
5. ‘கோட்டையினில் கழித்து
என்னை’ என்று தொடங்கி. ‘எஞ்ஞான்று
கூட்டுதி?’ என்கையாலே, பலித்த பொருளைப் பிரமாணங்களோடு
அருளிச்செய்கிறார், ‘எவர்கள்’ என்று தொடங்கி. ஸ்ரீ கீதை, 7 : 14. இது,
அவனைப் பற்றி
விரோதியைப் போக்கிக்கொள்ளுவதற்குப் பிரமாணம்.
6. ஸ்ரீ கீதை, 18
: 62. இது, அவனையே பற்றிப் பரமபதத்தை அடைவதற்குப்
பிரமாணம்.
|