த
திருவடிகளிலே சேர்ப்பிக்கும்;
நீங்களும் திருவடிகளைச் சார்ந்து அடிமை செய்யப் பாருங்கோள்,’ என்றவாறு.
வி-கு :
‘கருதி உரைத்த தமிழ்’ என்க. ‘இப்பத்தும் அடைவிக்கும்,’ என்க.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இதுதானே அவன் திருவடிகளிலே சேர்க்கும்,’
என்கிறார்.
2புறம்பு
உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து ஏத்துகிறார்,
‘திருவடியை’ என்று தொடங்கி. திருவடியை - எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை. நாரணனை -
3கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, ‘இவை அல்லோம்’ என்ற அன்றும் தான்
விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய் இருப்பவனை. கேசவனை - அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் 4விரோதியைப் போக்குமவனை.
பரஞ்சுடரை -இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச்
சொன்னபடி. திருவடி சேர்வது கருதி - ‘அவன் திருவடிகளைக் கிட்டினோமாகவேண்டும்’ என்னும் எண்ணத்தையுடையராய்;
‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?
செழுங்குருகூர்ச்
சடகோபன் - 5திருவயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு
போலே, அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம். திருவடிமேல் உரைத்த
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி
___________________________________________________
1. ‘திருவடியே அடைவிக்கும்’
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘‘திருவடியை’ என்பது
போன்றவைகளால் ஏத்துவதற்குக் காரணம் என்’
என்ன, ‘புறம்பு உண்டான’ என்று தொடங்கி அதற்கு
விடை
அருளிச்செய்கிறார். ‘உபகாரத்தை’ என்றது, மேற்பாசுரத்தில் கூறிய
உபகாரத்தை.
3. ‘நாராயணன்’ என்ற தொகையை
அன்மொழித்தொகையாகக் கொண்டு
பொருள் அருளிச்செய்கிறார், ‘கேவலம்’ என்று தொடங்கி.
4. ‘விரோதியைப் போக்குமவன்’
என்றது, கேசி என்ற அசுரனைக்
கொன்றதனைக் குறித்தபடி.
5.
‘செழுமை’ என்ற அடைமொழிக்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘திருவயோத்தியையில்’ என்று தொடங்கி.
மண்பாடு - மண்ணின் தன்மை.
|