New Page 1
சேர்ந்து ஒன்றுமின் -
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே
சென்று அடைவிக்கும்; நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.
1அவன்
திருவடிகளிலே கிட்டக்கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற்பானை போலே
அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள். 2‘ சமானமான
பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர்
ஆகின்றார்கள்,’ என்றும், ‘பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ, அந்த அந்த வழியிலே
உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே, இளைய பெருமாளைப்போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத்
தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள். ‘இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப்
பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில், ‘இவர் அருளிச்செய்த இத்திருவாய்மொழியைச் சொல்லவே,
தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத்திருவாய்மொழிதானே,’
என்க.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
நண்ணாது மாலடியை நானிலத்தே
வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறும்
இவ்வுயிர்கள் - தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல்
கண்கலங்கும் மாறன்அருள்
உண்டுநமக்கு உற்றதுணை
ஒன்று.
(39)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
____________________________________________________
1. ‘ஒன்றுமின்’ என்பதற்கு
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அவன்
திருவடிகளே’ என்று தொடங்கி. ‘அடிசிற்பானைபோலே
நித்திய
கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்,’ என்று கூட்டுக.
‘உங்களுக்குமாயிராமல்’ என்றது,
‘ஸ்வாதந்திரியம் கொண்டாடாமல்’
என்றபடி. ‘அடிசிற்பானை போலே’ என்றது, ‘பாரதந்திரியம்
கொண்டாடி’
என்றபடி.
2. ‘‘ஒன்றுமின்’
என்றது, ‘அவனிடத்தில் இலயம் அடைந்தது’ என்கிறபடியே,
ஐக்கியம் போன்று இராநிற்க, அவனுடைய
திருவடிகளிலே நித்திய
கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்,’ என்று சொல்லுகிறது யாங்ஙனம்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சமானமான பதவியை’ என்று
தொடங்கி.
|