பத
பத்தாந்திருவாய்மொழி
- ‘ஒன்றுந்தேவும்’
முன்னுரை
ஈடு :
1ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய்
இருக்குமாறு போலே, நித்திய விபூதியும் நித்தியசூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச்,
சொல்லாநிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில் உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய்
இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில் விருப்பு இல்லாதவர்களாய்த்
துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து, சர்வேசுவரன் உளனாய்
இருக்க நாம் இருந்து துன்பப்பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க, இவர்கள் இப்படி
நோவுபட விட்டிருக்கை போருமோ?’ 2இவர்களையும் திருத்தி நல்வழி போக்கவேண்டும்.’
என்று அவன் திருவடிகளிலே சரணம் புக, அவன் இவரை நோக்கி, ‘நம் குறையன்றுகாணும்; இவர்கள் அறிவில்லாத
பொருள்களாயிருக்க நாம் நினைத்தபடி காரியங்கொள்ளுகிறோம் அல்லோமே? அறிவுடையராய பின்பு
இவர்கள் பக்கலிலேயும் 3ருசி உண்டாக வேண்டுங்காணும். மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய
மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மைப் போன்று ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்; முடியாமையாலே
கண்ணநீரோடேகாணும் கை வாங்கினோம்,’ என்ன,
____________________________________________________
1. மேல் திருவாய்மொழியில்
அருளிச்செய்த ஆழ்வான் நிர்வாஹத்திற்குத்
தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஒரு நிலத்திலே’
என்று
தொடங்கி. ஒரு கூறு - ஒரு பாகம். உவர்ந்து கிடக்க - உவர் நிலமாய்க்
கிடக்க. ‘நித்திய
விபூதியும்’ என்றது, முத்தர்களைக் கூறியபடி; ஆகுபெயர்.
2. ‘இவர்களையும்’ என்றது,
‘என்னைப்போலவே இவர்களையும்’ என்றபடி.
3. ‘ருசி உண்டாகவேணுங்காணும்’
என்றது, ‘ருசி முன்னாகப் போகாமையாலே
வைதிக புத்திரர்கள் மீண்டார்களேயன்றோ? என்றபடி.
‘தாளாற் சகங்கொண்ட தாரரங்
கா!பண்டு சாந்திபன்சொல்
கேளாக் கடல்புக்க சேயினை
மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தாரை
மீட்டதும் மாறலவே
மீளாப் பதம்புக்க மைந்தரை
நீயன்று மீட்டதற்கே?’
என்பது திருவரங்கத்துமாலை.
|