பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
377

New Page 1

‘இவர்களுக்கும் ருசி இல்லையேயானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமேயாயிற்று; ஆன பின்பு, இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ 1என்று, ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச்செய்து, வெற்றி கொண்டு நிற்கச்செய்தே, துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான அன்பினாலே உதங்கன் வந்து, ‘உனக்குச் சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் அன்புள்ளவனாய்த் துரியோதனாதியர்களை அழியச் செய்தாயே?’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்; அவர்கள் ‘பந்துக்கள் வாழ்ந்தால் நாங்கள் வாழோம்!’ என்ற பின்பன்றோ நாம் அவர்களை அழியச்செய்தது?’ என்ன, ‘நீ எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனான பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்தவிட்டுக் கொள்ளாது விட்டது என்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற்போலே, இவரும் நிர்ப்பந்திக்க, ‘சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனைகாணும்; அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே? உம்மைக் கொடுபோய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று 2பரமபதத்தைக் காட்டிக் கொடுக்க, கண்டு கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.

    3பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேசுவரன் கைவிட்ட இவ்வுலகத்தையும் திருத்தப் பார்க்கிறார்.  4‘பிறப்பினை

_____________________________________________________

1. ‘என்று’ என்னும் எச்சத்தை, பின்னே வருகின்ற ‘இவரும் நிர்ப்பந்திக்க’
  என்றதிலேயுள்ள ‘நிர்ப்பந்திக்க’ என்ற எச்சத்தோடு முடிக்கவும். இவரும் -
  ஆழ்வாரும். இவர் நிர்ப்பந்தத்திற்கு ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார். ‘ஸ்ரீ
  கிருஷ்ணன்’ என்றது முதல் ‘பொருந்தவிட்டுக்கொள்ளாது விட்டது என்?’
  என்றது முடிய.

2. ‘பரமபதத்தைக் காட்டிக்கொடுக்க’ என்றது, மேல் திருவாய்மொழியிலேயுள்ள
  ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர்
  கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.

3. பின்னையும் - ஈசுவரன் கைவிட்ட பின்பும். ‘அருள் கொண்டாயிரம்
  இன்தமிழ் பாடினான், அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்றும், ‘நின்
  கண்வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம்
  செல்லாமையாலே’ என்கிறார். ‘ஈசுவரன் கைவிட்டிருக்க, இவர் திருத்தினால்
  திருந்துவர்களோ?’ என்னில், ‘உபரிசரவசுவினுடைய உபதேச சுத்தியாலே
  பாதாளத்தையடைந்தவர்கள் திருந்தினாற்போன்று, மஹாபாகவதரான
  இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள்,’
  என்க.

4. ‘திருந்தும் பிரகாரம் எப்படி?’ என்ன, ‘பிறப்பினை’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.