பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
378

அடியோடு அறுக்கவேண்டும்’ என்று பார்த்தார்; பிறப்பிற்கு வித்து மற்றைத்தேவர்கள் பக்கல் பரத்துவ புத்தி அடியான ஈடுபாடும், பகவானே பரம்பொருள் என்ற ஞானம் இல்லாமையுமாய் இருந்தது; அத்தேவர்கள் பக்கல் பரத்துவ புத்தி நீங்குதற்கு உறுப்பாக, பகவத் ஞானத்தை உபதேசிக்கிறார் இத்திருவாய்மொழியில்.

    1முதல் திருவாய்மொழியிலே, தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக, அவன் காட்டிக்கொடுத்த பரத்துவத்தை அநுசந்தித்து, அதுதன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று சுருதிச் சாயையாலே விரித்து அருளிச்செய்தார், 2‘சுவானுபவந்தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, அறிவுடையராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து. பின்னர் 3இதிகாச புராணக் கூற்றுகளாலே பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில். அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்துவத்தை விளக்கி விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான 4பரத்துவ சங்கையை அறுத்துக்கொண்டு, பகவானுடைய பரத்துவத்தை விளக்கி விரித்துப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.

    அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்திலே பரத்துவத்தை அருளிச்செய்தார்; அது இவ்வுலக மக்களுக்கு எட்டாநிலமாய் இருந்தது. அதற்காக, அவதாரத்திலே _____________________________________________________

1. ‘முதல் திருவாய்மொழி தொடங்கிப் பகவத் பரத்துவத்தை
  அருளிச்செய்திருக்க, மீளவும் இத்திருவாய்மொழியில் அதனையே
  அருளிச்செய்வது கூறியது கூறல் ஆகாதோ?’ எனின், கூறியது கூறல்
  ஆகாமைக்கு இரண்டு வகையான காரணங்கள் காட்டி விளக்குகிறார், ‘முதல்
  திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி. ‘சுருதிச் சாயையாலே’ என்றது,
  பரத்துவத்திலே பரத்துவத்தை.

2. ‘தம் அனுபவத்தின்பொருட்டுப் பரத்துவத்தை அநுசந்தித்தால் பிறர்க்குக்
  காரியகரம் ஆகுமோ?’ உபதேசிக்க வேண்டாவோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘சுவானுபவந்தான்’ என்று தொடங்கி.

3. ‘இதிகாச புராணக் கூற்றுகளாலே’ என்றது, அவதாரத்திலே பரத்துவத்தைக்
  குறித்தபடி.

4. ‘பரத்துவ சங்கையை அறுத்துக்கொண்டு’ என்றது, ‘நாயகன் அவனே’ என்று
  சுருதிச்சாயையாலும், ‘கபால நன்மோக்கம்’ என்று இதிகாச புராணங்களில்
  கூறிய வகையாலும் விரித்துப் பேசுகிறார் இதில்,’ என்றபடி.