பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
379

பரத

பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில். அதுவும் பரத்துவத்திலே பரத்துவத்தை ஒத்ததாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை. இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்தன. அக்குறை ஒன்றும் இன்றிக்கே, 1‘பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே, பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத அர்ச்சாவதாரத்திலே பரத்துவத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல்.

    2எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து, ‘பரதத்துவம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ?  நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும் மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது, இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச்செய்வர்;

_____________________________________________________

1. திருநெடுந்தாண். 10.

2. ‘சாஸ்திரங்கள் எல்லாம் ஒரே மிடறாகப் பகவானுடைய பரத்துவத்தையும்
  அவனை உபாசிக்குந் தன்மையையும் சொல்லாநிற்க, இவர் இப்போது
  உபதேசிக்க வேணுமோ? இவர் உபதேசத்தாலே பலித்தது உண்டோ?’ என்ன,
  சாஸ்திரமுண்டானாலும் பலியாதபடியையும், இவ்வாழ்வார் அருளிச்செய்தது
  பலித்தபடியையும் பெரியார் ஒருவர் வார்த்தையாலே வெளியிடுகிறார்
  ‘எம்பார்’ என்று தொடங்கி. என்றது, ‘எல்லா வேத சாஸ்திரங்களும், கூளமும்
  பலாப்பிசினும் போலே வேறு தெய்வங்களையும் கலந்து கட்டியாகக்
  கூறுவதால், அவற்றால் பரத்துவ விவேகம் பண்ணப்போகாமையாலே, அவை
  சமுசாரிகளுக்குப் பயன்பட்டன இல்லை; அங்ஙன் அன்றிக்கே,
  திருவாய்மொழி, கேவலம் பகவத் பரமாகையாலே, இதிலே
  சேர்ந்தவர்களுக்குக் கலக்கம் இல்லாமையாலும் ஐயம் இல்லாமையாலும்
  பகவத் பரத்துவ நிர்ணயம் பண்ணலாம்படி இருக்கையாலே இவர் உபதேசம்
  பயன்பட்டது,’ என்றபடி. ‘சாஸ்திர ஞானம் பஹூ கிலேசம்’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி, ‘அறுதியிடமாட்டாதே’ என்கிறார். இங்கே பட்டர்
  அருளிச்செய்த வார்த்தையை நினைவு கூர்வது: முதற்பத்து ஈட்டின்
  தமிழாக்கம், ஐதிஹ்யம் பக். 5. ‘பெண்களும்’ என்றது, அகளங்க
  நாட்டாழ்வான் மனைவியார் திரிபுரா தேவியார் சரிதையைத் திருவுள்ளம்
  பற்றி.