1
1‘எம்பெருமானாருடைய
திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய குறைவற்ற செல்வத்தைத் துரும்புக்குச்
சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?
2‘கார்த்தவீரியார்ஜூனன்
என்பான் ஒருவன் தான் இராச்சிய பரிபாலனம் செய்கிற காலத்தில் யாரேனும் ஒருவர் பாபசிந்தனை
பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப் போந்தான்
என்றால், இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்; ஒரு அற்ப மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று
இருக்கிறவர்கள், சர்வசத்தியாய் ‘சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேசுவரன் இப்படிப் பரந்து
நின்று நோக்கும்,’ என்றால், மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள். ‘ஜாதி,
பொருள்கள்தோறும் நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால், ‘அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’
என்று இருப்பர்கள்; ‘பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரந்து நிறைந்து தங்கியிருப்பான்,’ என்றால்,
‘இது கூடாது’ என்று ஐயப்படாநிற்பார்கள்.
3இனி,
‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில், எல்லாரும் ஒரு சேர விரும்புவது சுகங்கள்
உண்டாகவும், துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய் இருக்கச் செய்தே, விரும்பிய சமயத்தில்
விரும்பப்பட்ட சுகம் வரக் காணாமையாலும், விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும்
‘இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று நுகர்விக்கிறான் ஒருவன் உளன்,’ என்று கொள்ள
வேண்டி இருந்தது. 4‘அது என்? சுக துக்கங்களுக்குக் காரணமான
_____________________________________________________
1. ‘அடுப்பிடு கல்லைப்போன்று
நினைத்திருப்பர்’ என்பதற்குப் பிரமாணம்
அருளிச்செய்கிறார், ‘எம்பெருமானாருடைய’ என்று தொடங்கி,
இது,
கோவிந்தபட்டருடைய திருவார்த்தை.
2. மேலே, ‘சகல சாஸ்திரங்களும்
கூளமும் பலாப்பிசினும் போலே
தேவதாந்தரங்களையும் கலந்து கட்டியாகச் சொல்லுகையாலே பரத்துவம்
இன்னதென்று அறியப் போகாது’ என்று அருளிச்செய்து, ‘வேதசாஸ்திரங்கள்
உண்மையை உள்ளவாறு தெரிவித்தாலும்
பாபங்களின் மிகுதியாலும்
சேதநர்க்கு நம்பிக்கை உதியாது’ என்கிறார், ‘கார்த்தவீரியார்ஜூனன்’
என்று
தொடங்கி.
3. ‘சர்வேசுவரன் கைவிட்ட
சமுசாரத்தையும் திருத்தப் பார்க்கிறார்’ என்று
முன்னர்க் கூறியவற்றைப் பற்றிச் சங்கிக்கிறார்,
‘இனி இவர்’ என்று தொடங்கி.
4. பொதுவான சங்கையை அநுவதித்து நீக்குகிறார், ‘அது என்?’ என்று
தொடங்கி.
|