பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
381

புண

புண்ணிய பாவங்கள் நுகர்விக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில், அந்நல்வினை தீவினைகளினுடைய தன்மையை ஆராய்ந்தவாறே, அவை, அறிவு அற்றனவாய் இருப்பன சில கிரியா விசேடங்கள் ஆகையாலே, 1அப்போதே நசிப்பனவாம்; 2இனி ஒரு மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கருத்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு ஒரு செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு இறைவனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கூடாமையாலே ஒரு இறைவனைக் கொள்ளவேண்டி வரும்; 3இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து ‘அது அதிருஷ்டரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக்காட்டிலும், ‘ஒரு பரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய தண்டனை உருவத்தாலும் திருவருள் உருவத்தாலும் இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் 4நன்றே அன்றோ?

_____________________________________________________

1. ‘சப்தம் புத்தி கர்மம் இவை மூன்றும் மூன்று கணங்கள்தான் இருக்கும்’
  என்று சொல்லப்படும் தன்மையைத் திருவுள்ளம் பற்றி, ‘அப்போதே
  நசிப்பனவாம்’ என்கிறார்.

2. ‘கிரியா விசேடங்கள் நிலைத்திருப்பவைகளாகக் கொண்டாலும், அவை
  அறிவில்லாத பொருள்கள் ஆகையாலே, அவற்றுக்குப் பலத்தைக் கொடுக்கும்
  தன்மை கூடாது,’ என்னுமதனைத் திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார், ‘இனி’
  என்று தொடங்கி.

3. ‘ஒரு சேதனனைக் கொள்ள வேண்டியது என்? ‘தர்மியைக்
  கற்பிக்குமதைக்காட்டிலும் தர்மத்தைக் கற்பிப்பது சிறந்தது’ என்கிற
  நியாயத்தாலே, தர்மியான சேதனனைக் கற்பிப்பதைக்காட்டிலும் கர்மங்களால்
  உண்டாகின்ற ‘அபூர்வம்’ என்கிற தர்மத்தைக் கற்பித்து, ‘அதுவே,
  பலத்தைக் கொடுக்கிறது’ என்றாலோ?’ என்னில், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இனி அபூர்வம் என்று ஒன்றை’ என்று தொடங்கி.
  ‘அபூர்வம்’ என்பது, கர்மங்களால் உண்டாகின்ற ஒரு சம்ஸ்கார விசேடம்.
  ‘அதிருஷ்டம்’ என்பது, கர்மங்களால் தோன்றுகின்ற ஒரு சத்தி விசேடம்.

      தர்மியான ஈசுவரன் சுருதிகளாலே பிரதிபாதிக்கப்பட்டவன்
  ஆகையாலே, கற்பிக்கப்பட்டவன் அல்லனேயன்றோ? ஆகையாலே, ’தர்மி
  கல்பநாதோ வரம் தர்ம கல்பநா’ என்கிற நியாயம் இங்குத் தடை செய்யாது
  என்பது கருத்து.

4. ‘நன்றேயன்றோ?’ என்றது, ‘அபூர்வத்தைக் கற்பித்தாலும், அதுவும்
  அசேதநமாகையாலே பலத்தைக் கொடுக்க முடியாது; அதன் பொருட்டுச்
  சேதனனைக் கற்பிக்குமளவில் அவ்வாறு கற்பிக்கிறவனுக்கு மிகவும் கல்பநா
  கௌரவம் (கௌரம் - அருமை) உண்டாகையாலே, முதலிலேயே
  சேதனனைக் கற்பித்தல் எளிதாகையாலே ‘நன்றேயன்றோ?’ என்கிறார்,’
  என்றபடி.