|
ஆத
ஆத்தும சப்தத்தாலே
சொல்லி, 1அந்த
ஆத்தும சப்தமும் பலவிடங்களிலும் ஒட்டிக்கொள்ளலாயிருக்கையாலே, 2‘நாராயணன்
ஒருவனே இருந்தான்,’ என்று நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.
3‘ஆனால்,
பின்னர் 4சத்தும் இல்லை; அசத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும்,
5‘சம்பு: ஆகாஸ மத்யே த்யேய:’ என்றும் காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத்
தகுந்தவனாயுள்ள தன்மையையும் சிவன் முதலானவர்களுக்கு விதியாநின்றதே; அவை செய்வன என்?’ என்னில்,
அப்பெயர்களால் 6அவர்கள்
_____________________________________________________
1. ‘அந்த ஆத்தும
சப்தமும் பல இடங்களிலும்
ஒட்டிக்கொள்ளலாயிருக்கையாலே’ என்றது, ஆத்துமா என்ற சொல்லுக்கு
ஜீவாத்துமா, பரமாத்துமா முதலிய பல பொருள்கள் உண்மையாலே என்க.
2. ‘ஏகோ ஹவை நாராயண
ஆஸீத் நபிரஹ்மா
நேஸாநோ நேமே த்யாவா
பிருதிவீ ந நக்ஷத்ராணி’
என்பது, மஹோபநிடதம்.
3. ‘ஆனால், பின்னர்’ என்றது,
‘நாராயணனே காரணனும் தியானிக்கத்
தக்கவனுமானால்’ என்றபடி.
4. ‘ந சத் நச அசத் சிவ
ஏவ கேவல:’
என்பது , ஸ்வேதாஸ்வதரம்.
‘சத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின
சித்தினை. ‘அசத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின அசித்தினை.
5. ‘சம்பு : ஆகாச மத்யே த்யேய:’
என்பது, ஸ்வேதாஸ்வதரம்.
6.
‘அவர்கள் உத்தேசியர்களாகச் சொல்லப்பட்டார்களேயாகிலும்’ என்றதனால,்
ஸ்வபக்ஷத்தால் அவர்கள்
உத்தேசியராகச் சொல்லக்கூடாது என்கை.
‘யாங்ஙனம்?’ எனின், ‘நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத்
ருத்ரோ
ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே
ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே
‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம்
கூடாது. ‘சதபதத்திலே
அஷ்டமூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’
என்பது
முதலாகத் தொடங்கப்படும் வாக்கியங்களால், நான்முகனால்
படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும்,
பெயர் வைக்கப்படுதலும்
முதலாயின சிவனுக்குச் சொல்லப்படுதலால், தியானிக்கப்படுதலும் கூடாது,’
என்றபடி. ‘ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே
ஸம்பிரஸூயந்தே’ என்பதனால்,
விஷ்ணுவுக்கும் பிறப்புச்
சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’
முதலிய
விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக, கர்மங்கட்குக்
கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும்
தன்
இச்சையாலே அவதரிக்கின்ற சர்வேசுவரனுடைய அவதாரங்களைக்
குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது
முதலான சுலோகங்கள் இங்கே
அநுசந்தேயங்கள். ‘சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள்
இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல்
வேண்டும்,’ என்க.
|