|
எதன
எதனால் உண்டான
பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ, நாசத்தையடைந்து எதனிடத்தில் இலயப்படுகின்றனவோ,
அதனைத் தியானம் பண்ணுவாயாக; அதுதான் பரம்பொருள்,’ என்று கொண்டு, மற்றைப் பொருள்கட்குத்
தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத் தியானம்பண்ணத்
தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது; 1‘காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’
என்னக்கடவதன்றோ?
தியானம் செய்தற்குரிய
அந்தப் பொருளை, 2‘சோமபானம் செய்வதற்குரிய சுவேத கேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு
முன்னே ‘சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற
சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று, 3 ‘இந்த உலகமானது படைப்பதற்கு
முன்னே பிரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று பிரஹ்ம சப்தத்தாலே சொல்லி, அந்த
பிரஹ்ம சப்தந்தானும் 4அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, 5‘இந்த
உலகமானது படைப்பதற்கு முன்னே ஆத்துமா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று
_____________________________________________________
1. ‘காரணந்து த்யேய:’ என்பது,
அதர்வசிகை.
2. ‘ஸதேவ ஸோம்யே தமக்ர
ஆஸீத்
ஏகமேவ அத்விதீயம்’
என்பது, சாந்தோக்யம்.
3. ‘பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர
ஆஸீத்’
என்பது, வாஜஸநேயம்.
4. ‘அநேக பொருள்களைக்
கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல்,
வேதம் முதலிய பொருள்களைக் காட்டுமாகையாலே’
என்றபடி.
5. ‘ஆத்மா
வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத்’ என்பது, ஐதரேயம்.
|