|
கடவத
கடவதாய், அதில் பூர்வபாகமானது,
ஆராதனத்தில் தன்மையைச் சொல்லியும், சுவர்க்கம் முதலான பேறுகளையும் அவற்றையடைதற்குரிய சாதனம்
முதலானவற்றையும் சொல்லியும் அவற்றிலேநின்று பரக்குமதாய் இருக்கும்; இனி, உத்தர பாகமானது,
சர்வேசுவரனுடைய சொரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும்.
1
‘இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும்
காரணமாய் இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள்
ஒருங்க விட்டு வைத்தன. ‘எங்ஙனே?’ என்னில், 2 ‘எதனிடத்திலிருந்து இந்தப்
பொருள்கள் உண்டாகின்றனவோ,
_____________________________________________________
1. ‘பொருளை அறுதியிடுவது,
இலக்ஷணத்தாலும் பிரமாணத்தாலும்’ என்கிற
நியாயத்தாலே, மேலே பிரமாணத்தை அறுதியிட்டார். இனிமேல்
அந்தப் பரம
சேதனனுடைய இலக்ஷண விஷய சம்பந்தமான கேள்வியை அநுவதித்து
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இனி’ வணங்குவதற்குரிய’ என்று
தொடங்கி.
2. ‘யதோவா இமாநி
பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி
யத்பிரயந்தி அபிஸம்விசந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்பிரஹ்ம’
என்பது, தைத்திரீய. பிருகு. 1.
‘எல்லா வாக்கியங்களும்
ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே,
இங்கு, ‘தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை
‘ததேவ
விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே
தியானம் பண்ணுவாய்’
என்ற பொருள் போதரும்; அவ்வாறு போதரவே,
‘மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’
என்ற பொருளும்
கிடைக்குமேயன்றோ? அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப்
பொருள்கட்கு’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
|