அழக
அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு
கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்,’ என்றவாறு.
வி-கு : ‘உய்யப்
புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர்
போய் உய்யற்பாலர்,’ என்க.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம்
எனப்படுகின்ற சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, பகவானுடைய கைங்கரியத்தையே புருஷார்த்தமாகப்
பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.
உய்யப் புகுமாறு
அஃதே என்று - ‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று.
கண்ணன் கழல்கள் மேல் - 2‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி,
3கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே? அதுதன்னையே
அருளிச்செய்கிறார். ‘இப்படி 4‘அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத்
தாம் பற்றியது? 5‘துயர்அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு
அருளிச்செய்தார்; 6‘வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார்
அங்கு. இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்; ‘கண்ணன் கழல்கள்
நினைமினோ,’ என்று பரோபதேசம்
_____________________________________________________
1. ‘இவை பத்தும் அஃகாமல்
கற்பவர் ஆழ்துயர் போய், உய்யற்பாலர்,’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. திருவாய்மொழி,
3. 10 : 10.
3. திருவாய்மொழி,
4. 1 : 3.
4. ‘அடி’ என்றது, சிலேடை
: திருவடிகளும், மூலமும்.
5. இப்பாசுரத்திலுள்ள
‘கழல்கள்மேல்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்கிறார், ‘துயரறு’ என்று தொடங்கி.
இது திருவாய்மொழி, 1.1:1.
6. திருவாய்மொழி,
1. 2 : 10.
|