New Page 1
செய்தார். இது என்ன
1அடிப்பாடுதான்! 2‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே
அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
கொய்பூம்பொழில்
சூழ்குருகூர்ச் சடகோபன் குற்றேவல் - எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச்சோலை சூழ்ந்த
திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேசுவரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம் செய்தவை
இவைதாம். செய்கோலத்து ஆயிரம் - கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய்
- செய்த கவி என்னுதல்; ‘குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல்.
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யற்பாலர் - அவன்
குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் பகவானுக்கு வேறுபட்ட
பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற கேடுகள் நீங்கி உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் - சுருங்கல்.
‘உய்தலே தன்மையாக உடையர் ஆவர்,’ என்பார்,
‘உய்யற்பாலர்’
என்கிறார். ‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர்
என்றபடி.
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஒருநா யகமாய் உலகுக்கு
வானோர்
இருநாட்டில் ஏறிஉய்க்கும்
இன்பம் - திரமாகா
மன்னுயிர்ப்போ கம்தீது;
மால்அடிமை யேஇனிதாம்;
பன்னிஇவை மாறன்உரைப் பால்.
(31)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. அடிப்பாடு - அடியிலே
படுகை; ‘அன்பு’ என்றபடி.
2. திருவாய்மொழி,
9. 1 : 10. ‘பரோபதேசம் முடிக்கிறதும்’ என்றது, ‘விரோதி
சொரூப விஷயமான பரோபதேசத்தை
முடிக்கிறதும்’ என்றபடி. ‘வீடுமின்
முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்,’ ‘கொண்ட
பெண்டிர்’
என்கிற நான்கு திருவாய்மொழிகளும் விரோதி சொரூப விஷயமான
பரோபதேசமாதல் காண்க.
அவற்றுள், ‘கொண்ட பெண்டிர்’ என்ற
திருவாய்மொழி, பரோபதேசம் செய்யும் திருவாய்மொழிகளில்
ஈற்றுத்
திருவாய்மொழியாதலின், ‘பரோபதேசத்தை முடிக்கிறதும்’ என்கிறார்.
|