இரண
இரண்டாந்திருவாய்மொழி
- ‘பாலனாய்’
முன்னுரை
ஈடு :
1இராம விரகத்தில் திருவயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய
உறுப்புகளுமாய்ப் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்; இக்கூப்பீட்டை
அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே
ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம்
அன்றோ?’ என்று உகந்தார், ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில்; ‘அவ்வளவேயோ?
பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார் ‘சன்மம்
பலபல’ என்ற திருவாய்மொழியில்; அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு
அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய
சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களையும், சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும்
உபதேசித்து, ‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ என்ற திருவாய்மொழியில்.
2பிராசங்கிகமாக,
இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும் அருளிச்செய்தார்?
_____________________________________________________
1. இவர்க்கு ஆற்றாமை
தலையெடுத்தது ‘முடியானே’ என்ற
திருவாய்மொழியிலேயாதலின், அது முதலாக வருகின்ற நான்கு
திருவாய்மொழிகளிலும்
சொல்லப்பட்ட விஷயத்தை அநுவதியா
நின்றுகொண்டு, இத்திருவாய்மொழிக்குச் சங்கதி அருளிச்செய்கிறார்
‘இராம
விரகத்திலே’ என்றது முதல் ‘தமக்குப் பகவானிடத்தில் விடாய் பிறந்தபடி
சொல்லுகிறார் இதில்’ என்றது முடிய. புறம்பே -மற்றைத் தேவர்களிடத்திலே.
பாழே - பகவத் விஷயத்தில் ஆக்காமல்
வீணாக. ‘பணங்கொள்
அரவணையான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அடையத்தக்க மேலான
பலமாய்’
என்கிறார்.
2. பிராசங்கிகம் - இடைப்பிற
வரல். ‘பிள்ளை’ என்றது, நம் பிள்ளையை. ‘இது’
என்றது, ‘ஒரு நாயகம்’ என்ற திருவாய்மொழியிற்கூறிய
விஷயத்தை.
‘அதுவும்’ என்றது, ‘சூழ் விசும்பணி முகில்’ என்ற திருவாய்மொழியிற்கூறும்
விஷயத்தை.
|