|
New Page 1
பொ-ரை :
‘அடிமையாய்ப் புகுந்து சிவபிரானாகிய தன்னைக் கண்ட
மார்க்கண்டேயனைச் சிவபிரானும் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றியது நாராயணனுடைய திருவருளாலேயாம்;
கொக்கைப் போன்று வெண்மை நிறத்தோடு மலர்கின்ற பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருக்குருகூர்
என்னும் திவ்விய தேசத்திலே மேன்மையையுடைய ஆதிப்பிரான் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்க,
வேறு தெய்வங்களைப் பற்றிப் பேசுகின்றீர்களே! உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே!’ என்கிறார்.
வி-கு :
‘அடிமையினால் புக்குத் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன்’ என்க. ‘தன்னை’ என்றது, சிவபெருமானை.
நக்கன் - வஸ்திரமில்லாதவன்; சிவபிரான். ‘திகம்பரன்’ என்றபடி. அருளே - ‘அருளாலே’ என்று
மூன்றாம் வேற்றுமை விரிக்கவும். கொக்கு - ஒரு பறவை, மாமரமும் ஆம்.
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘இங்ஙனே இருக்கச்செய்தேயும், மற்றைத்தேவனாகிய சிவபிரானை
வணங்கி அன்றோ மார்க்கண்டேயன் தான் விரும்பிய பயனைப் பெற்றது?’ என்ன, ‘ஆகில், இருந்தபடி
கேட்கலாதோ?’ என்கிறார்.
புக்கு அடிமையினால் -
அடிமையினால் புக்கு; என்றது, ‘சர்வேசுவரனுக்கு அடிமை என்று புக்கான் அல்லன்; ‘உருத்திரனுக்கு
அடிமை’ என்று புக்கான்,’ என்றபடி. 2தன்னைக் கண்ட - காணப் பெறாமையாலே தான்
இழந்தான் அல்லன். ஆக, ‘போற்றி வணங்கிய தன்மையில் குறையினாலே இழந்தான் அல்லன்; காணப்
பெறாமையாலே இழந்தான் அல்லன்,’ என்றபடி. மார்க்கண்டேயன் அவனை - மார்க்கண்டேயனானவனை.
3நக்கபிரான் - நக்கன் - நக்நன். ‘பிரான்’ என்கிறார், தன்னுடைய
கோஷ்டிக்கு உபகாரகனாய் இருக்கையாலே. அன்றிக்கே, 4ஞானத்தினைக்
_____________________________________________________
1. முன் பாசுரத்தில் கூறிய பொருளையும் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘இங்ஙனே இருக்கச் செய்தேயும்’ என்றது, ‘மற்றைத்
தெய்வங்கள், பிறப்பு
இறப்புகட்குக் காரணர்கள், சர்வேசுவரனே மோக்ஷத்தைக்
கொடுக்கக் கூடியவன்,’ என்று பிரசித்தி
உண்டாயிருக்கச்செய்தேயும்’ என்றபடி.
2. தன்னை - சிவபிரானை.
3. நக்கன் - சிவன்.
‘நிர்வாணமாக உள்ளவன்’ என்பது பொருள்.
4. ‘ஞானத்தினைக்
கொடுக்கக் கூடியவன்’ என்றது, ‘சிவபிரானிடமிருந்து
ஞானத்தை விரும்ப வேண்டும்’ என்ற பிரம்மாண்ட
புராண வசனத்தை
நோக்கி. 430ஆம் பக். காண்க.
|