|
New Page 1
கொடுக்கக் கூடியவன் ஆதலாலே
‘பிரான்’ என்கிறார் என்னுதல். 1மேல், ‘நாராயணன்’ என்கையாலே,
‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று ஞானோபதேசத்தைச் செய்து
அவன் திருவடிகளிலே காட்டிக்கொடுத்தான் என்கை.
அன்று உய்யக்கொண்டது
- ஆபத்துக்காலத்திலே பாதுகாத்தது. நாராயணன் அருளே - நாராயணனுடைய திருவருளாலேயாம். என்றது,
2‘நீ நெடுநாள் பச்சையிட்டு என்னை வணங்கினாய்; அவ்வணக்கம் பயன் அற்றுப்
போயிற்றதாக ஒண்ணாது,’ என்று அவனை அழைத்து, ‘நானும் உன்னைப்போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக்காண்
இப்பதம் பெற்றது; ஆதலால், இனி உன்னுடைய விருப்பத்தை நம்மால் செய்து முடிக்க இயலாது; இனி
ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலே அன்றோ?’ என்று அவனைக் கொண்டுபோய்ச் சர்வேசுவரன்
பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி. ‘அருள்’ என்ற பெயர்ச்சொல் எல்லா வேற்றுமையோடும்
சேரத் தக்கதாகையாலே, ‘அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமையாக விரித்துக்கொள்க. அன்றிக்கே,
‘சிவபிரான் இவனைக் காப்பாற்றிக்கொண்டது சர்வேசுவரன் திருவருளைப் பண்ணிக் கொடுத்து’ என்று
இரண்டாம் வேற்றுமையாக விரித்துப் பொருள் கோடலுமாம். ‘இவன் புருஷகாரமாய் நின்று திருவருள்
புரியச் செய்தான்,’ என்றபடி.
கொக்கு அலர் தடம்
தாழை வேலித் திருக்குருகூரதனுள் - கொக்குப் போன்று வெளுத்த நிறத்தையுடைய மலர்களை உடைத்தாயிருப்பதாய்ப்
பெருத்திருந்துள்ள
_____________________________________________________
1. ‘மேல்’ என்று தொடங்கும்
வாக்கியத்திற்குக் கருத்து, ‘அவனுடைய
திருவடிகளைக் காட்டி உஜ்ஜீவிப்பித்தான்’ என்பது. இங்கு
‘அடிமை’ என்றது.
நாராயண பதத்தை வேற்றுமைத் தொகையாகக் கொண்டு கூறும் பொருளால்
கிடைக்கும்
சேஷத்துவத்தை.
2. நாராயணன் அருளை உபதேச
முகத்தாலே அவனுக்குப் பண்ணிக்கொடுத்த
விதத்தை விரித்து அருளிச்செய்கிறார், ‘நீ நெடுநாள்’
என்று தொடங்கி.
‘ஊண் கொடுத்தல்
உபதேசங் கொடுத்தலேயன்றோ?’ என்றது, ஒருவன்
வீட்டில் ஒருவன் பசியாளனாய் வந்து, ‘என் பசியைப்
போக்க வேணும்’
என்றால், உண்டானால் அன்னமிட்டுப் பசியைப் போக்குவர்; இல்லாவிடில்,
‘இன்னார் வீட்டில் பசியாளர்க்கு இடுவர்; அங்கே போ,’ என்று சொல்லுதல்
செய்வர்கள்: அதனைச்
சொன்னபடி.
|