அவ
அவ்வடிமைதான் மூன்று
வகைப்படும். இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர்.
‘என்?’ என்னில், 1‘கால் ஆழும் நெஞ்சழியும் கண் சுழலும்’ என்கையாலே. இனி,
‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமேயானால். வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார்
என்கிறதோ?’ என்னில், அன்று; அப்படியாமன்று 2இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’
என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்; இல்லையாகில், எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலேயாகிலும்
ஆக வேண்டும்; இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே
ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
‘ஆனால், மற்றைத்
தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேசுவரனுடைய
பரத்துவத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக
அமையும். ‘ஆனால், பரத்துவ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலேயாதல், ‘அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலேயாதல்
அமையும். ‘ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், 3‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலேயாதல்
_____________________________________________________
1. ‘பாலாழி நீகிடக்கும்
பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும்
கண்சுழலும் - நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்!
தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய்! நிற்சார்ந்து
நின்று.’
பெரிய திருவந். 34.
‘நன்று; நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான்
செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப்
பின்னே’ என்னும் நியமம்
இல்லை இவர்க்கு என்க.
2. ‘இப்பாசுரம்’ என்றது,
‘ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்’ என்றதனை.
3. ‘செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால்
நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல்
வண்ணன்,’ என்ற ஒன்பதாம்
பாசுரத்திலே நோக்கு.
|