அ
அமையும். ‘ஆனால், பரோபதேசம்
பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின், ‘வீடுமின்
முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்; அவற்றிலும்
ஆகப்பெற்றதில்லை.
‘ஆனால், யாது ஆவது!’
என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே, ‘திருக்குருகூரதனுள் பரன்திறமன்றிப்
பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று, பொலிந்து நின்ற பிரானே எல்லாப்
பொருள்கட்கும் அறப்பெரியவன் என்று இவர் அருளிச்செய்யக் கேட்டு, ‘கபால நன்மோக்கத்துக் கண்டு
கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள். 1‘இவர்தாம்
அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி? 2‘பொலிக
பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ? 3சர்வேசுவரன்
அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சமுசாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்துவ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி 4‘இடங்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலத் தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
‘ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
வண் குருகூர் நகரான்
- இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று. நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
- ‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே இம்மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சார்த்தின மாலையும் வாடி இருந்தது முன்பு; இப்போது, பகவானுடைய பரத்துவத்தை விரித்து அருளிச்செய்து,
_____________________________________________________
1. ‘திருந்தினார்கள் என்று
அறியும்படி எங்ஙனே?’ என்ன, ‘இவர் தாம்’ என்று
தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. ‘அப்படி மங்களாசாசனம்
செய்தாரோ?’ என்னில், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘பொலிக பொலிக’ என்று தொடங்கி.
3. ‘இவர் இப்படித் திருத்தியது
அரிய செயலோ?’ என்ன, ‘சர்வேசுவரன்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. திருவாய்.
5. 2 : 4.
|