New Page 1
‘இனி இவர்களுக்கு ஒரு
குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள்
கமழ் மகிழ் மாலை’ என்கிறது. மாறன் சடகோபன் - பகவானை அடைவதற்குத் தடையாக உள்ளனவற்றிற்கு
எல்லாம் யமன் ஆனவர். வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் - தம்முடைய
ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும் இப்பத்தையும் வல்லார். சிலர் ஐம்பொறிகளையும்
அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய வேட்கையால்
சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.
மீட்சி இன்றி
வைகுந்த மாநகர் வல்லார் கையது - இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது
இவர்கள் கையது. இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப்பொருளில் ‘மற்றது’ என்பது
இடைச்சொல். அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழியாக்கி, ‘மற்றையதான
- அதாவது, இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்துவ ஞானமே பிரயோஜனம் போரும்; அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு
ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஒன்று மிலைத்தேவிவ்
வுலகம் படைத்தமால்
அன்றிஎன ஆரும் அறியவே
- நன்றாக
மூதலித்துப் பேசியருள்
மொய்ம்மகிழோன் தாள்தொழவே
காதலிக்கும் என்னுடைய
கை.
(40)
நான்காம் பத்து ஈட்டின்
தமிழாக்கம்
முற்றிற்று
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை மலரடி வாழ்க!
நம்பிள்ளை நற்றாள் வாழ்க!
மாறன் மலரடி வாழ்க!
|