பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
7

என

என்?’ ‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே! வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே, பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே 1இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது; இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்; அவை கடிக்கும். அன்றிக்கே, கருநாய் என்பதற்கு, கருமை - 2சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல். அன்றிக்கே, கரு நாய் - கருவையுடைத்தான நாய் என்னுதல்; என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி. காலர் - ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது? இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார். சிதைகிய பானையர் - கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே போகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக்கொள்ளும். இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார், ‘சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார், ‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

    பெரு நாடு காண - 3முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ? அதற்கும் போர

_____________________________________________________

1. இருட்டுப்புரை - இருள் நிறைந்துள்ள இடம்.

2. ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’ என்பது தொல்காப்பியம்.

3. ‘பெருநாடு காண்கிறது எதற்காக!’ என்ன, விடை அருளிச்செய்கிறார், ‘முன்பு
  பச்சை கொண்டு வந்தவர்கள்’ என்று தொடங்கி. பச்சை - காணிக்கை;
  கையுறை. இச்சொல், நச்சினார்க்கினியர் எழுதிய சிந்தாமணி உரையில் பல
  இடங்களில் பயின்று வருதல் காணலாகும். ‘இருந்ததே குடியாக’ என்றது,

 
எல்லாரும் என்றபடி.