இப
இப்போது தடை அற்று
இருந்ததே குடியாகக் காணும்படியாக, அன்றிக்கே, முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே
எல்லாரும் காண வருவர்கள் ஆதலின், ‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல். ‘இப்படிச் செய்வது
ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில், இம்மையிலே - அப்படி வாழ்ந்த
இந்தப் பிறவியிலே. பிச்சை - 1முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய்
அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது. 2முன்பு
இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே
அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர். அன்றிக்கே. இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே,
தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், ‘தாம்கொள்வர்’ என்கிறார் என்னுதல்.
இராச்சியத் திரு
இங்ஙனேயான பின்பு, திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ - ‘ஸ்ரீமானான நாராயணன்
திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’ 3‘இடர் கெடுத்த திருவாளன்
_____________________________________________________
1. ‘பிச்சை’ என்றதற்கு
பாவம், ‘முன்பு அரசர்களுக்கு’ என்று தொடங்கும்
வாக்கியம்.
2. ‘தாம்’ என்றதற்கு
பாவம், ‘முன்பு இராசாக்கள்’ என்று தொடங்கும்
வாக்கியம். ‘தாம் கொள்வர்’ என்றதற்கு இரண்டாவதாக
ஒரு கருத்து
அருளிச்செய்கிறார். ‘இடுகின்றவர்கள் பக்கல்’ என்று தொடங்கி. என்றது.
‘வாங்க
வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு உண்டு; கொடுக்க வேண்டும்
என்ற எண்ணம் கொடுக்கின்றவனுக்கு இல்லை,’
என்றபடி.
3. ‘பிச்சை தாம்
கொள்வர்’ என்று இடர்ப்பட்டமை சொல்லுகையாலே,
‘சர்வேசுவரனை அடைந்தால் இடர் இல்லையோ?’
என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இல்லை’ என்பதற்கு இரண்டு பிரமாணங்கள் காட்டுகிறார்.
‘இடர்
கெடுத்த திருவாளன்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
6: 9 :
1.
‘பெடையடர்த்த
மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து
மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த
சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த
திருவாளன் இணையடியே அடைநெஞ்சே!’
என்பது அத்திருப்பாசுரமாகும்.
|